Automobile Tamil

2017 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, கிளாசிக் 500 விரைவில் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 மாடல்களில் கூடுதலான நிறம் மற்றும் வசதிகளை பெற்றதாக இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வெளியிடப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 2017 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படுகின்ற 350சிசி சந்தையில் உள்ள கிளாசிக் 350 மாடலில் பின்புற சக்கரங்களுக்கு 153mm டிரம் பிரேக் பொருத்தப்பட்டிருந்த நிலையில் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸை அதிகரிக்கும் நோக்கில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. மேலும் தண்டர்பேர்டு மாடலில் உள்ள அதே ஸ்விங் ஆர்ம் கிளாசிக் 350யிலும் சேர்க்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கூடுதலாக புதிய கன்மெட்டல் கிரே நிறமும் சேர்க்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

2017 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500

கிளாசிக் வரிசையில் இடம்பெற்றுள்ள உயர்ரக கிளாசிக் 500 மாடலில் புதிதாக ஸ்டெல்த் பிளாக் நிறுத்துடன் கிளாசிக் 350 போல பின்சக்கரங்களில்  பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸை அதிகரிக்கும் நோக்கில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. மேலும் தண்டர்பேர்டு மாடலில் உள்ள அதே ஸ்விங் ஆர்ம் கிளாசிக் 500யிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

இரு மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷன் இந்த வருடத்திலும் வழங்கப்படவில்லை, என்பதனால், வரும் ஏப்ரல் 2018 முதல் ஏபிஎஸ் பிரேக் கட்டாயம் என்பதனால்,அதனை தொடர்ந்தே அடிப்படையாக இணைக்கப்பட உள்ளது.

எனவே, வரவுள்ள இரண்டு புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஆகிய மாடல்கள் விலை உயரும் வாய்ப்புகள் உள்ளது.

image source – team-bhp

Exit mobile version