2018 பஜாஜ் பல்சர் RS 200 ரேசிங் ரெட் எடிசன் அறிமுகம்

0

2018 Bajaj Pulsar RS 200 Racing Red Edition200சிசி ஃபேரிங் பைக் சந்தையில் முன்னணி வகிக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், 2018 பஜாஜ் பல்சர்  RS 200 பைக்கில் புதிதாக ரேசிங் ரெட் எடிசன் என்ற மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2018 பஜாஜ் பல்சர் RS 200

மிக நேர்த்தியான வடிவமைப்பை கொண்ட ஆர்எஸ் 200 பைக்கில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிவப்பு நிறத்தை தொடர்ந்து வேறு எந்த மாற்றங்களும் இல்லாமல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

இரட்டை புராஜெக்டர் முகப்பு விளக்குகளுடன் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட பைக் மாடலாக விளங்கும் RS200 பைக்கில் 24.2 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 199.5சிசி பிஎஸ் 4 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது . 6 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

2018 பஜாஜ் பல்சர் RS 200 பைக் அதிகபட்ச வேகம் மணிக்கு 141 கிமீ ஆகும்.

முன்புறத்தில் 300மிமீ பட்டர்ஃபிளை டிஸ்க் பிரேக் பின்புறத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள்  சஸ்பென்ஷன் அமைப்பு, பின்புறத்தில் நைட்ராக்ஸ் மோனோ சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.
2018 பஜாஜ் பல்ஸர் ஆர்எஸ் 200 பைக் விலை ரூபாய் 1,23,589 (Non-ABS) மற்றும் ரூபாய் 1,35,805 (ABS).. ( அனைத்தும் தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம் விலை )