விரைவில் 2018 பஜாஜ் அவென்ஜர் 180 பைக் விற்பனைக்கு வரவுள்ளது

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற க்ரூஸர் பைக் மாடல்களில் தொடக்கநிலை சந்தையில் உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், பஜாஜ் அவென்ஜர் வரிசையில் புதிதாக 2018 பஜாஜ் அவென்ஜர் 180 பைக் ரூ.83,400 விலையில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

2018 பஜாஜ் அவென்ஜர் 180

கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய இரு வண்ணங்களில் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ள அவென்ஜர் 180 மாடல் அவென்ஜர் 220 ஸ்டீரிட் மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்சர் 180 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே எஞ்சினை பெற்றுள்ள அவென்ஜர் 180 எஞ்சின் அதிகபட்சமாக 17 HP பவர் மற்றும் 14.22 Nm டார்க் வழங்கவலத்தாக வரவுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டிருப்பதுடன் க்ரூஸர் ரக மாடல்களுக்கு ஏற்ற வகையில் எஞ்சின் தன்மை மாற்றியமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவென்ஜர் 220 பைக்கில் உள்ளதை போன்று டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறாமல், வந்துள்ள 180 மாடலில் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லேட் மற்றும் சொகுசு தன்மையை வழங்கக்கூடிய இருக்கையை பெற்றுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் டிஸ்க் பிரேக்கினை டயரில் கொண்டிருக்கும் , பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பரை கொண்டிருக்கின்றது.

சுஸூகி இன்ட்ரூடர் 150 பைக் மாடலுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட உள்ள அவன்ஜர் 180 விரைவில் சந்தையில் கிடைக்க தொடங்கலாம்.

2018 பஜாஜ் அவென்ஜர் 180 பைக் விலை ரூ.83,400 (எக்ஸ்-ஷோரூம்)

Source – AutocarIndia

Recommended For You