2018 ஹீரோ HF டான்கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சந்தையிலிருந்து நீக்கப்பட்ட ஹீரோ எச்எஃப் டான் பைக், மீண்டும் மேம்பட்ட மாடலாக 2018 ஹீரோ HF டான் பைக் ரூ.37,400 (எக்ஸ்-ஷோரூம் ஒரிசா) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2018 ஹீரோ HF டான்

2018 ஹீரோ HF டான்

கடந்த மே 2017-ல் சந்தையிலிருந்து நீக்கப்பட்ட ஹீரோ எச்எஃப் டான் பைக், முதற்கட்டமாக ஒரிசா மாநிலத்தில் மட்டும் மீண்டும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

8.36 PS பவர் , 8.05 Nm டார்க் வெளிப்படுத்தும் 97.2cc  எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலாக விற்பனைக்கு வந்துள்ள இதில் 4 வேகத்தில் பயணிக்க உதவும் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

2018 ஹீரோ HF டான்

தொடக்கநிலை சந்தைக்கு ஏற்ற டான் பைக்கில் மிக நேர்த்தியான வட்ட வடிவ முகப்பு விளக்குடன், அகலமான இருக்கை, கிராப் ரெயில் ஆகியவற்றுடன் முன்புறத்தில் டெலிஸ்கோபிக்ஃ ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் ட்வீன் சாக் அப்சார்பர் பெற்றுள்ளது. பிரேக்கிங் திறனில் முன்புறத்தில் 130 மிமீ மற்றும் பின்புறத்தில் 110 மிமீ டிரம் ஆகியவற்றை பெற்று விளங்குகின்றது.

2018 ஹீரோ HF டான் பைக் விலை ரூ.37,400 (எக்ஸ்-ஷோரூம் ஒரிசா)

2018 ஹீரோ HF டான்

2018 ஹீரோ HF டான்