2018 ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

0

இந்தியாவின் ஸ்கூட்டர் சந்தையில் முதன்மையான இடத்தை பெற்று விளங்கும் ஹோண்டா நிறுவனம், மேம்படுத்தப்பட்ட புதிய 2018 ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டரை ரூ. 55,157 விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலாக விலை அதிகரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள ஏவியேட்டர் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள், 4 in 1 இக்னிஷன் கீ, முன் மற்றும் பின் ஹூக்குகள் போன்றவற்றை கொண்டு விளங்குவதுடன் புதிதாக சிவப்பு நிற வண்ணத்தை பெற்றதாக வந்துள்ளது.

Google News

109.19CC  கொண்ட ஒற்றை சிலிண்டர் அதிகபட்சமாக 8 ஹெச்பி பவருடன்,  8.94 டார்க்கினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள எஞ்சினில் சிறப்பான மைலேஜ் தரும் நோக்கில் ஹோண்டா நிறுவனத்தின் காப்புரிமை பெற பெற்ற ஹோண்டா ஈக்கோ நுட்பத்தினை பெற்றதாக வந்துள்ள ஏவியேட்டரில் சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்துச் செல்ல சிவிடி ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஆக்டிவா ஸ்கூட்டரின் அதே என்ஜினை ஏவியேட்டர் பெற்றிருந்தாலும் கூடுதலான நீளம் மற்றும் உயரத்தை பெற்றிருப்பதுடன் முன்பக்க டிஸ்க் பிரேக் ஆப்ஷனாலாக இடம்பெற்றுள்ளது. மேலும் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்பக்கத்தில் ஹைட்ராலிக் வகை சஸ்பென்ஷனையும் பெற்றதாக உள்ளது. இருக்கையின் அடியில் அமைந்துள்ள ஸ்டோரேஜ் பெட்டியில் மொபைல் சார்ஜிங் யூஎஸ்பி போர்ட் வசதியுடன் வந்துள்ளது.

மொத்தம் மூன்று விதமான வேரியன்டில் ஏவியேட்டர் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில் விலை விபரத்தை தொடர்ந்து காணலாம்.

ஏவியேட்டர் டிரம்  – ரூ. 57,572

ஏவியேட்டர் டிரம் அலாய் – ரூ. 59,508

(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)