இந்தியன் சிப்டெய்ன் எலைட் இன்று வெளியாகிறது

0

இந்தியன் சிப்டெய்ன் எலைட் மோட்டார் சைக்கிள்கள் இன்று அறிமுகம் செய்யப்படும் என்று இந்தியன் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. டூரிங் மோட்டார் சைக்கிகள் வகைகளான இந்த சிப்டெய்ன் எலைட் மோட்டார் சைக்கிள்கள், தண்டர்ஸ்ட்ரோக் 111 V-டூவின் என்ஜின் ஆற்றலிலேயே இயங்கும். இது 1,811cc யூனிட் ஆகவும், மிக குறைந்த வேகத்தில் 3,000 rpm-ல் இயங்குவதுடன், பெரிலவில் 161.6Nm டார்க்யூ-வை உருவாக்கும். இந்த மோட்டார் சைக்கிள்கள் எவ்வளவு ஆற்றல் கொண்டது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றபோதும், இவை 100 bhp-க்கு மேற்பட்ட ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் மோட்டார் நிறுவனம் தங்கள் இணையத்தில் சிப்டெய்ன் எலைட் மோட்டார் சைக்கிகளை புதிய மாடல் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோடு, உலக மார்க்கெட்டுக்காக 350 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் ஒன்றுடன் ஒன்றை ஒப்பிடும் போது சற்று வேறுபட்டே இருக்கும். அத்துடன் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மோட்டார் சைக்கிள்களும் 25 மணி நேரம் செலவிட்டு பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.

Google News

டாப்-ஸ்பெக் கொண்ட சிப்டெய்ன் எப்படி இருக்கும் என்று டிசைனர்களின் கற்பனையில் உருவாக்கப்பட்டதே இந்தியன் சிப்டெய்ன் எலைட் மோட்டர் சைக்கிள்கள். இதில், பயணம் செய்பவர்களின் சீட்டை அட்ஜஸ்ட் செய்யும் வசதி ப்ளோர்போர்டில் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், குரூஸ் கண்ட்ரோல், ப்ளேர் பவர் விண்டோஷீல்டு, கீலெஸ் ஸ்டார்ட், ரிமோட்-லாக்கிங் சாடல்பேக்ஸ், லெதர் சீட் மற்றும் ஹெவிபார் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

இதுமட்டுமின்றி இதில் இடம் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க வசதிகளாக, டயர் பிரஸர் மானிட்டரிங் சிஸ்டம், சாடல்பேக்ஸ்-இல் ஸ்பீக்கர்களுடன் கூடிய 200 வாட் ஆடியோ சிஸ்டம், எஎம்/எப்எம் ரேடியாவுடன் கூடிய டச் ஸ்கீரின் இன்போடெய்ன்மன்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி ஆகியவற்றுடன் யூஎஸ்பி போர்டு-ம் பொருத்தப்பட்டுள்ளது.