2018 சுசூகி ஜிக்ஸெர்இந்தியாவில் பிரசத்தி பெற்று விளங்கும் 150-160சிசி வரையிலான சந்தையில் மிக முக்கியமான மாடலாக இடம்பெற்றுள்ள 2018 சுசூகி ஜிக்ஸெர்  மற்றும் சுசூகி ஜிக்ஸெர் SF பைக்குகளில் புதிய நிறத்தினை பெற்ற மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

2018 சுசூகி ஜிக்ஸெர் & ஜிக்ஸெர் SF

2018 சுசூகி ஜிக்ஸெர்

ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்குகளில் இரு வண்ண கலவையிலான இரண்டு புதிய நிறங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அவை கேண்டி சோனாமா ரெட் மற்றும் மெட்டாலிக் சோனிக் சில்வர் ஆகும். நிறத்தை தவிர வேறு எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இடம்பெறவில்லை.

14.8 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில் சுஸூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ளதால் சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14.02 Nm ஆகும். இஞ்ஜின் ஆற்றலை கடத்த 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரினை பெற்றுள்ளது.ஜிக்ஸெர் நேக்டு பைக்கின் முன்பக்க டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் ட்ரம் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கின்றது. ஜிக்ஸெர் SF பைக்கில் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வழங்கபட்டுள்ளது.

2018 சுசூகி ஜிக்ஸெர்

2018 சுஸூகி ஜிக்ஸெர் பைக் விலை

டிரம் பிரேக் – ரூ. 77,015

ரியர் டிஸ்க் பிரேக்   – ரூ.80,929

2018 சுஸூகி ஜிக்ஸெர் SF பைக் விலை

ஜிக்ஸெர் SF பைக் விலை ரூ. 90,037

ஜிக்ஸெர் SF ABS பைக் விலை ரூ. 96,386