புதிய நிறத்தில் யமஹா ஃபசினோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

0

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஸ்கூட்டரில் மிகவும் ஸ்டைலிசான தோற்ற அமைப்பினை பெற்றதாக விளங்கும் யமஹா ஃபசினோ ஸ்கூட்டரின் 2018 மாடல் எஞ்சின் ஆற்றல் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லாமல் விற்பனைக்கு வந்துள்ளது.

யமஹா ஃபசினோ

காலத்திற்கு ஏற்ற வகையிலான மாற்றத்தை வழங்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள ஃபசினோ ஸ்கூட்டரின் புதிய கிளாமரஸ் கோல்டு நிறம் இளைய தலைமுறையினரின் மிக விருப்பமான வண்ணமாக விளங்கும் என யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் கருதுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மிக சிறப்பான மைலேஜ் திறனை வெளிப்படுத்தும் 113சிசி பூளு கோர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 7.1 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் இழுவைத் திறன் 8.1 என்எம் ஆகும். யமஹா ஃபசினோ ஸ்கூட்டர் மைலேஜ் லிட்டருக்கு 66கிமீ ஆகும்.

2018 யமஹா ஃபசினோ ஸ்கூட்டர் கிளாமரஸ் கோல்டு, டேப்பர் ப்ளூ, பீமிங் ப்ளூ, டேசிங் க்ரே, சிஸ்லிங் சியான், ஸ்பாட்லைட் வெள்ளை, மற்றும் சாஸ்ஸி சியான் ஆகிய 7 நிறங்களில் கிடைக்க உள்ளது. முந்தைய ஃப்யூசன் சிவப்பு நிறம் நீக்கப்பட்டுள்ளது.

கோல்டு மற்றும் ப்ளூ ஆகிய இரு நிறங்களை புதிதாக பெற்று அப்ரானில் க்ரோம் பூச்சு கொண்டு விலையில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 2018 யமஹா ஃபசினோ ஸ்கூட்டர் விலை ரூ. 56,191 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)