2019 பஜாஜ் V15 பவர் அப் விற்பனைக்கு வெளியானது

0

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்கப்பல் மெட்டல் பாகங்களை கொண்டு உருவாக்கப்படுகின்ற மாடல் என்ற பெருமையை பெற்ற பஜாஜ் V15 பைக்கின் கூடுதல் பவர் வழங்குகின்ற மாடல் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. #Bajaj #V15

விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதல் பவரை வெளிப்படுத்துகின்ற 2019 பஜாஜ் வி15 பைக் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ. 66,138 (விற்பனையக விலை) அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் கூடுதலான பவரை பெற்று விளங்குகின்றது.

Google News

இந்தியாவின் முன்னணி போர்க்கப்பலாக விளங்கிய ஐஎன்எஸ் விக்ராந்த் மெட்டல் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டு வரும் பஜாஜ் வி வரிசையில் இடம்பெற்ற வி15 மாடலில் 149.5 cc ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 12.8 bhp பவர், 13 NM டார்க் செயல்திறன் கொண்டுள்ளது. இது முந்தைய வி15 மாடலை விட 1 bhp பவர் மற்றும் 0.3 NM டார்க் கூடுதலாக வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த பைக்கில் முக்கிய மாற்றமாக கியர் ஷிஃப்ட் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, முதல் கியர் மட்டும் ஷிஃப்ட் டவுன், மற்ற நான்கு கியர்களுக்கு ஷிஃப்ட் அப் பேட்டரன் வகையில் வழங்கப்பட்டுள்ளது. முன்பாக அனைத்து கியர்களும்  ஷிஃப்ட் அப் முறையில் வழங்கப்பட்டது.

புதிய வி15 மாடலில் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷன் வழங்கப்படவில்லை. அடுத்த சில மாதங்களில் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

2019 பஜாஜ் V15 பவர் அப் விலை ரூ. 66,138 (விற்பனையக விலை சென்னை).