ரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது

0

2019 Kawasaki Versys 1000 Price in india

இந்தியாவில் ரூபாய் 10.69 லட்சத்துக்கு கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அட்வென்ச்சர் டூரர் மாடலான வெர்சிஸ் 1000 நீண்ட தொலைவு பயணத்துக்கு ஏற்றதாக விளங்கி வருகின்றது.

கவாஸாகி வெர்சிஸ் 1000

கவாஸாகி பைக் தயாரிப்பாளரின் வெர்சிஸ் ரக மாடலில் உள்ள வெர்சிஸ் X 300 மற்றும் வெர்சிஸ் 1000 மாடல்களை தொடர்ந்து இந்தியாவில் கிடைக்கின்ற கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கில் 102 hp பவரை வெளிப்படுத்தும் 4 சிலிண்டர்களை பெற்ற 1043 சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள. இதன் டார்க் 102 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இரட்டை எல்இடி ஹெட்லைட்டுகள், அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய விண்ட்ஸ்கிரீன், எல்சிடி டிஜிட்டல் கன்சோல் , கார்னரிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம், கவாஸாகி டிராக்‌ஷன் கன்ட்ரோல், கவாஸாகி இன்டலிஜென்ட் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை பெற்றதாக வந்துள்ளது.

21 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பெற்ற வெர்சிஸ் 1000 பைக்கில் 17 அங்குல அலாய் வீல், இருக்கை உயரம் 790 மிமீ கொண்டதாக விளங்குகின்றது.

கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விலை

இந்திய சந்தையில் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்துடன் விளங்குகின்ற வெர்சிஸ் 1000 பைக்கின் முன்பதிவு கடந்த நவம்பர் முதல் ரூ.1.50 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்து வருகின்றனர். கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விலை ரூ.10.69 லட்சம் ஆகும்.