2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விபரம் மற்றும் படங்கள் கசிந்தது

0

சுஸுகி ஜிக்ஸர் 155

இந்தியாவின் பிரபலமான ஸ்டீரிட்ஃபைட்டர் மாடலாக விளங்கும் சுஸுகி ஜிக்ஸர் பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலின் படங்கள் மற்றும் முக்கய விபரங்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

Google News

முன்பாக இந்திய சந்தையில் முழுமையாக ஃபேரிங் செய்யபட்ட ஜிக்ஸெர் SF 250 மற்றும் 155சிசி என்ஜின் பெற்ற ஜிக்ஸெர் SF மாடலும் விற்பனைக்கு வெளியிடப்பட்டு தற்போது நாடு முழுவதும் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது.

2019 சுஸுகி ஜிக்ஸர் 155

தற்போது இணையத்தில் கிடைத்துள்ள புதிய படங்களின் மூலம் மேம்படுத்தப்பட்ட 155 சுஸுகி ஜிக்ஸர் பைக் மிக நேர்த்தியான புதிய வடிவத்தை வெளிப்படுத்தும் ஹெட்லைட், சமீபத்தில் வெளியான ஜிக்ஸர் எஸ்எஃப் வரிசைகளில் இடம் பெற்றுள்ள டேங்க், ஸ்பிளிட் இருக்கைள் என அனைத்தும் பெற்றிருக்கின்றது.

14.1 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில் FI பெற்று சிறப்பான மைலேஜ் தரவல்லதாக விளங்கும். இதன் டார்க் 14.02 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

அடுத்ததாக, 250சிசி என்ஜின் பெற்ற ஜிக்ஸர் 250 மாடலில் SOCS (Suzuki Oil Cooling System) நுட்பம் பெற்ற 249சிசி SOHC , நான்கு வால்வுகளை பெற்ற FI ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. அதிகபட்சமாக 26.5 HP பவரும் மற்றும் 22.6 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது. சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக் மைலேஜ் லிட்டருக்கு 38.5 கிமீ ஆக இருக்கும்.

அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியாக உள்ள ஜிக்ஸர் 155, மற்றும் ஜிக்ஸர் 250 மாடல்கள் அமோகமான வரவேற்பினை பெறும் என எதிர்பாஃக்கப்படுகின்றது.  ஜிக்ஸர் 250 மாடல் ரூ.1.55 லட்சம்  விற்பனையக விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இதுதவிர, தொடக்கநிலை 155சிசி என்ஜின் பெற்ற 2019 ஜிக்ஸர் 150 பைக் ரூபாய் 97,000 விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

image credit – rushlane