Automobile Tamil

2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்

2019 சுசுகி ஜிக்ஸெர் SF

ஃபேரிங் ஸ்டைல் ரக புதுப்பிக்கப்பட்ட 2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக்கினில் உள்ள முக்கியமான 5 சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை போன்றவற்றை இந்தச் செய்தி தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் அதிக இளைய தலைமுறையினரால் விரும்ப்படுகின்ற 150சிசி-200சிசி வரையிலான ஃபேரிங் ரக மாடல்களில் ஒன்றாக ஜிக்ஸெர் எஸ்எஃப் விளங்குகின்றது. என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லை.

சுசுகி ஜிக்ஸெர் SF சிறப்புகள்

முந்தைய மாடலை விட ரூ.8,000 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்ற புதிய எஸ்எஃப் ரக மாடல் குறைந்த விலை 200சிசி எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஹீரோ மாடல் உட்பட யமஹா ஆர்15 போன்ற பிரபலமான மாடல்களை எதிர்கொள்கின்றது.

ஸ்டைல்

சமீபத்தில் களமிறங்கிய ஜிக்ஸெர் SF 250 பைக்கின் ஸ்டைல் உந்துதலை நேரடியாக பெற்ற ஜிக்ஸெர் SF 155 மாடல் மூன்று பிரிவுகளை கொண்ட எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் போன்றவை கொண்டுள்ளது. குறிப்பாக ஸைலென்சர், இருக்கை போன்றவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அடுத்தப்படியாக பைக்கின் எடை 146 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது.

என்ஜின்

14.1 hp பவரை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் எஸ்எஃப் வரிசை பைக் என்ஜினில் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்று சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. முந்தைய மாடலின் பவர் 14.8 ஹெச்பி ஆக இருந்தது.

வசதிகள்

எல்இடி விளக்குகள் புதிதாக இணைக்கப்படிருப்பதுடன் கிளஸ்ட்டர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரினை பெற்றுள்ளது.

போட்டியாளர்கள்

சமீபத்தில் வெளியான குறைத விலை 200சிசி எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல் உட்பட யமஹா ஆர்15 போன்ற பிரபலமான மாடல்களை எதிர்கொள்கின்றது.

2019 ஜிக்ஸெர் SF விலை

ரூ.8,000 வரை முந்தைய மாடலை விட விலை அதிகரிக்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்டதாக ஜிக்ஸர் SF 150 பைக் ரூ.1,09,870 (எக்‌ஸ்-ஷோரூம் சென்னை) விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version