2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது

இந்தியாவில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்ற பிரசத்தி பெற்ற சூப்பர் பைக் மாடலில் ஒன்றான ஹயபுசா பைக்கின், 2019 சுசூகி ஹயபுசா பைக் மாடலுக்கு ரூ.1 லட்சம் செலுத்தி  டீலர் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சர்வதேச அளவில் ஐரோப்பா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுசூகி ஹயபுசா GSX1300R பைக் விற்பனையை கடுமையான மாசு விதிகளுக்கு உட்பட்டு சுசூகி நிறுத்தியதை தொடர்ந்தும் இந்திய சந்தையில் ஹயபுஸா விற்பனை செய்யப்பட உள்ளது.

வருகின்ற ஜனவரி 20, 2019 முதல் இந்தியாவில் டெலிவரி தொடங்கப்பட உள்ள ஹயபுசா பைக்கில் விற்பனையில் உள்ள மாடல்களின் வசதியை பெற்றிருப்பதுடன் ஏரோடைனமிக் வசதி, டிரைவ் மோட் செலக்டர் , பிரம்போ மோனோபிளாக் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட வசதிகளை பெற்று விளங்குகின்றது.

மிகவும் சக்திவாய்ந்த 1340சிசி இடபெயர்வு கொண்ட என்ஜின் அதிகபட்சமாக  199.7hp பவர் மற்றும் 155Nm டார்க் பெற்று விளங்குகின்றது. இந்தியாவில் உள்ள குருகான் ஆலையில் சுசுகி ஹயபுஸா பைக் பாகங்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யப்பட உள்ளது.

2019 சுசுகி ஹயபுஸா பைக் விலை ரூ. 13.59 லட்சம் (விற்பனையக விலை டெல்லி)

Exit mobile version