Automobile Tamilan

விரைவில்., புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகமாகிறது

டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின், பிரபலமான என்டார்க் 125 ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடல் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் டீசரை வெளியிட்டுள்ளது.

முதன்முறையாக ப்ளூடூத் ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி பெற்ற ஸ்கூட்டராக வெளியான என்டார்க்கில் புதுப்பிக்கப்பட்ட மாடலின் டீசர் வீடியோவில் எல்இடி ஹெட்லைட் உடன் கூடிய எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்றதாக வெளியாகியுள்ளது. எனவே, ஸ்கூட்டரின் முகப்பு தோற்றம் உட்பட பல்வேறு மாற்றங்களை டிசைனைங்கில் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய CVTi-REVV 124.79 cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்டோர்க் 3 வால்வுகளை கொண்ட ஏர்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 9.3 bhp ஆற்றலை 7500 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம் சுழற்சியில் 10.5 Nm டார்க்கினை வழங்கும் என்ஜின் பிஎஸ் 6 நடைமுறைக்கு மேம்படுத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்மார்ட்போனை ப்ளூடூத் வாயிலாக கனெக்ட் செய்ய வல்ல டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் டிவிஎஸ் Smart Xconnect எனப்படும் நுட்பம் உள்ளது.  இந்த டிஜிட்டல் கிளஸ்ட்டரிலிருந்து ப்ளூடூத் வாயிலாக மொபைல் போனை இணைக்கும் வசதி உட்பட, நேவிகேஷன் , அதிகபட்ச வேகம், லேப் டைமர், மொபைல் போன் பேட்டரி இருப்பு, இறுதியாக பார்க்கிங் செய்த இடம், சர்வீஸ் ரிமைன்டர், ட்ரிப்மீட்டர், இன்கம்மிங் அலர்ட், எஸ்எம்எஸ், மிஸ்டு கால் அலர்ட், எஞ்சின் வெப்பம், மொபைல் போன் நொட்வொர்க் சிக்னல், ஆட்டோ சிங்க் கடிகாரம், பிரத்தியேக ரைடிங் அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி இணைக்கப்பட்டிருந்தது. மேலும் விரைவில் வரவிருக்கும், டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி மாடலிலும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி இடம்பெற உள்ளது.

Exit mobile version