2020 ஹோண்டா டியோ பிஎஸ் 6 டீசர் வெளியானது

bs-vi-honda-dio-teased

இளைய தலைமுறையினரின் விருப்பமான ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வருவதனை உறுதி செய்யும் வகையில் முதல் டீசரை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விற்பனையில் உள்ள மாடலை விட முற்றிலும் மேம்பட்ட மாடலாக வரவுள்ள டியோ ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகளை பெறுவதுடன் ஸ்டைலிஷான பல்வேறு மாற்றங்களை தோற்ற அமைப்பிலும் பெற உள்ளது. டாப் வேரியண்டில் மட்டும் எல்இடி ஹெட்லைட் பெறலாம். குறிப்பாக இந்த ஸ்கூட்டரில் சமீபத்தில் விற்பனைக்கு வெளியான ஆக்டிவா 6ஜி என்ஜினை பெற்றிருக்கும்.

ஹோண்டாவின் eSP HET (Enhanced Smart Power) நுட்பத்தின் மூலம் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்ட என்ஜினை பெற்றுள்ளது. இந்த நுட்பம் PGM-FI, குறைந்த உராய்வு மற்றும் ACG ஸ்டார்டர் என மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

புதிய வசதிகளுடன் ஃபயூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 109.51 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp பவர் மற்றும்  5,250 ஆர்பிஎம்-ல் 8.79 NM டார்க் வழங்குகின்றது. முந்தைய மாடலை விட 10 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கவல்லதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ் 4 மாடலை விட 7.90 hp பவரை மற்றும் 9 என்எம் டார்க் வெளிப்படுத்தியது.

தற்போது விற்பனையில் கிடைக்கின்ற பிஎஸ்4 மாடல் ரூ.54,241 எக்ஸ்ஷோரூம் விலையில் துவங்குவதனால் பிஎஸ்6 பெற்ற புதிய 2020 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் ரூ.6500 முதல் ரூ.7500 வரை விலை உயர்த்தப்படலாம்.

Exit mobile version