ரூ.64,990 விலையில் ஹீரோ பேஷன் ப்ரோ பிஎஸ்6 விற்பனைக்கு வெளியானது

bs6 hero passion pro

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிஎஸ் 6 என்ஜினை பெற்ற பேஷன் ப்ரோ பைக் மாடலில் பல்வேறு மாற்றங்களை பெற்றதாக ரூபாய் 69,990 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு விதமான ஆப்ஷனில் வந்துள்ளது.

முந்தைய மாடலை விட பேஸன் ப்ரோ பைக் பல்வேறு வகையில் தோற்றம் உட்பட என்ஜின் என மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டைலிங் அம்சங்களை பொறுத்த வரை புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட், கூடுதலான ஃபேரிங் பேனல்கள், புதிய செமி டிஜிட்டல் கிளஸ்ட்டர், புதிய பெட்ரோல் டேங்க் கொண்டிருப்பதுடன் அசத்தலான மஞ்சள், சிவப்பு, கிரே மற்றும் கருப்பு நிறங்களை பெற உள்ளது. புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் மூலம் நிகழ் நேரத்தில் மைலேஜ் அறிந்து கொள்ளலாம்.

பேஷன் புரோவின் முந்தைய கார்பரேட்டட் என்ஜினுக்கு பதிலாக ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் இயக்கப்படுகின்ற 7,500 ஆர்.பி.எம்-ல் 8.9 பிஹெச்பி மற்றும் 5,500 ஆர்.பி.எம்-ல் 9.79 என்எம் டார்க் வெளிப்படுத்தும். மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் எளிதாக சவாரி செய்ய, இப்போது ஆட்டோ சாய்ல் அம்சத்தையும் பெறுகின்றது.

முந்தைய என்ஜினை விட புதிய பேஸன் புரோ மாடல் 5 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதுடன், 15 மிமீ வரை கிரவுண்ட் கிளியரண்ஸ் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பினை கொண்டிருக்கின்றது.

ஹீரோ பேஸன் புரோ மாடல் டிரம் மற்றும் டிஸ்க் உள்ளிட்ட இரண்டு வகைகளில் இந்த மோட்டார் சைக்கிள் வருகிறது.

hero passion pro bs6

Hero passion pro ரூ .64,990 (drum)

bs6 hero passion pro ரூ. 67,190 (disc)

(எக்ஸ்-ஷோரூம், டெல்லி).