ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிஎஸ் 6 என்ஜினை பெற்ற பேஷன் ப்ரோ பைக் மாடலில் பல்வேறு மாற்றங்களை பெற்றதாக ரூபாய் 69,990 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு விதமான ஆப்ஷனில் வந்துள்ளது.
முந்தைய மாடலை விட பேஸன் ப்ரோ பைக் பல்வேறு வகையில் தோற்றம் உட்பட என்ஜின் என மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டைலிங் அம்சங்களை பொறுத்த வரை புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட், கூடுதலான ஃபேரிங் பேனல்கள், புதிய செமி டிஜிட்டல் கிளஸ்ட்டர், புதிய பெட்ரோல் டேங்க் கொண்டிருப்பதுடன் அசத்தலான மஞ்சள், சிவப்பு, கிரே மற்றும் கருப்பு நிறங்களை பெற உள்ளது. புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் மூலம் நிகழ் நேரத்தில் மைலேஜ் அறிந்து கொள்ளலாம்.
பேஷன் புரோவின் முந்தைய கார்பரேட்டட் என்ஜினுக்கு பதிலாக ஃப்யூவல் இன்ஜெக்ஷன் இயக்கப்படுகின்ற 7,500 ஆர்.பி.எம்-ல் 8.9 பிஹெச்பி மற்றும் 5,500 ஆர்.பி.எம்-ல் 9.79 என்எம் டார்க் வெளிப்படுத்தும். மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் எளிதாக சவாரி செய்ய, இப்போது ஆட்டோ சாய்ல் அம்சத்தையும் பெறுகின்றது.
முந்தைய என்ஜினை விட புதிய பேஸன் புரோ மாடல் 5 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதுடன், 15 மிமீ வரை கிரவுண்ட் கிளியரண்ஸ் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பினை கொண்டிருக்கின்றது.
ஹீரோ பேஸன் புரோ மாடல் டிரம் மற்றும் டிஸ்க் உள்ளிட்ட இரண்டு வகைகளில் இந்த மோட்டார் சைக்கிள் வருகிறது.
Hero passion pro ரூ .64,990 (drum)
bs6 hero passion pro ரூ. 67,190 (disc)
(எக்ஸ்-ஷோரூம், டெல்லி).
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…
பியாஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அபே E-City FX, E-Xtra FX (Fixed Battery) எலக்ட்ரிக் ஆட்டோ பயணிகள் மற்றும் சுமை…
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற ஹேட்ச்பேக் கார்களில் முதன்மையாக விளங்கும் மாருதியின் ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சிறிய…