புதிய நிறத்தில் பிஎஸ்6 யமஹா எம்டி-15 பைக் அறிமுகமானது

0

BS-VI Yamaha MT-15

பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான புதிய யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு அடுத்த வருடத்தின் தொடக்க மாதங்களில் வெளியிடப்பட உள்ளது. புதிதாக ஐஸ் ஃப்ளூ வெர்மிலான் நிறத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Google News

சமீபத்தில் வெளியிடப்பட்ட யமஹா YZF-R15 பிஎஸ்6 என்ஜினை பெற உள்ள எம்டி-15 மாடலில் இப்போது 10,000 ஆர்.பி.எம்-ல் 18.3 பிஹெச்பி பவரையும், டார்க் 14.1Nm ஆக குறைந்துள்ளது. ஆறு வேக கியர்பாக்ஸுடன் சிலிப்பர் கிளட்ச் பெற்ற என்ஜின் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது.

புதிய மாடலில் சைடு ஸ்டாண்டு உள்ள சமயத்தில் என்ஜின் இன்ஹைபிட்டர், பின்புறத்தில் ரேடியல் டயர் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு சந்தைகளில் கிடைக்கின்ற புதிய நிறம் ஐஸ் ஃப்ளூ வெர்மிலான் பெற்றதாக வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற கலவை பிளாக் இன்ஷர்ட் போன்றவை பெற்றதாக அமைந்துள்ளது.

புதிய எம்டி -15 விலையை யமஹா வெளியிடவில்லை, இதன் விற்பனை 2020 ஜனவரியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும்கூட, பிஎஸ் 4 பதிப்பை விட ரூ .4,000 வரை கூடுதல் செலவாகும். தற்போது எம்டி-15 ரூ .1.36 லட்சம் (எக்ஸ்ஷோரூம், டெல்லி) ஆகும்.