ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 ஸ்பை படங்கள் வெளியானது

0

2020 Royal Enfield Meteor spied side

வரும் நவம்பர் 6 ஆம் தேதி ராயல் என்ஃபீல்டு விற்பனைக்கு வெளியிட உள்ள மீட்டியோர் 350 க்ரூஸர் பைக்கின் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. முந்தைய தண்டர்பேர்டு மற்றும் தண்டர்பேர்டு எக்ஸ் மாடலுக்கு மாற்றாக வரவுள்ளது.

Google News

புதிய டபுள் கார்டில் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள க்ரூஸர் ரக மீட்டியோரின் 350 மாடலில் இடம்பெற்றுள்ள புத்தம் புதிய லாங் ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துவது உறுதியாகியுள்ளது. முந்தைய பிஎஸ்-6 யூசிஇ 350 என்ஜின் பவர் 19.8 பிஹெச்பி மற்றும் 28 என்எம் டார்க் வெளிப்படுத்தி வருகின்றது.

2020 Royal Enfield Meteor spy

ஃபயர்பால், ஸ்டெல்லர், மற்றும் சூப்பர் நோவா (Fireball, Stellar & Supernova) என மூன்று விதமான வேரியண்டில் உள்ள வசதிகள் மற்றும் 7 விதமான நிறங்களின் விபரம் தற்போது இணையத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. குறிப்பாக 350 மீட்டியோரில் இடம்பெற உள்ள டிரிப்பர் நேவிகேஷன் ப்ளூடூத் ஆதரவுடன் செயல்படக்கூடிய டர்ன் பை டர்ன் நேவிகேஷனாக விளங்கும்.

ஃபயர்பால் மஞ்சள், ஃபயர்பால் சிவப்பு, ஸ்டெல்லர் ரெட் மெட்டாலிக், ஸ்டெல்லர் பிளாக் மேட், ஸ்டெல்லர் ப்ளூ மெட்டாலிக், சூப்பர்நோவா பிரவுன் டூயல்-டோன் மற்றும் சூப்பர்நோவா ப்ளூ டூயல்-டோன் என மொத்தமாக 7 நிறங்கள் மீட்டியோரில் இடம்பெற உள்ளது.

2020 Royal Enfield Meteor tank spied 2020 Royal Enfield Meteor cluster spy 2020 Royal Enfield Meteor spied rear

image source

web title : Royal Enfield Meteor 350 Spied Undisguised