Automobile Tamilan

2021 சுசூகி ஹயாபுசா பைக் அறிமுகமானது

உலகின் மிக சக்திவாய்ந்த பைக்குகளில் ஒன்றான சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின், ஹயாபுசா சூப்பர் பைக்கில் பல்வேறு நவீனத்துவமான எலக்ட்ரானிக்ஸ் அம்சங்களை பெற்று அதிகபட்ச வேகம் மணிக்கு 299 கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஹயாபுசா பைக்கின் தனித்துவமான டிசைன் அம்சங்களை தொடர்ந்து கொண்டு வந்துள்ள சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விற்பனையில் கிடைத்து வந்த முந்தைய புசா பைக்குகளை விட மிக விரைவான மாடல் என உறுதிப்படுத்தியுள்ளது.

ஹயாபுசா என்ஜின்

முந்தைய என்ஜின் சிசியில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து  1340cc நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 9700 RPM-ல் அதிகபட்சமாக 190hp பவர் மற்றும் 7000 RPM-ல் 150Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. முந்தைய இன்ஜின் பாகங்களில் பிஸ்டன், கேம் ஷாஃப்ட், கனெக்ட்டிங் ராடு உட்பட பல்வறு உதிரிபாகங்கள் பெரிய அளவில் புதுப்பித்துள்ள நிலையில், பழைய பைக்கினை விட 7 ஹெச்பி வரை பவர் குறைந்துள்ளது.

அடிச்சட்ட அமைப்பில் எந்த மாற்றமும் பெரிதும் இல்லாமல் சிறிய அளவில் மட்டும் twin-spar அலுமிணிய ஃபிரேம் பெற்று வாகனத்தின் நீளத்தில் எந்த மாற்றமும் இல்லை.  சுசுகியின் இன்டெல்லிஜன்ட் ரைட் சிஸ்டத்தை கொண்டுள்ள ஹயபுஸா பைக்கில் ஆறு ஆக்சிஸ் IMU, பத்து நிலை டிராக்‌ஷன் கட்டுப்பாடு, பத்து நிலை ஆன்டி வீலி கன்ட்ரோல், மூன்று நிலை எஞ்சின் பிரேக் சிஸ்டம், மூன்று சக்தி முறைகள், ஏவுதள கட்டுப்பாடு, பயணக் கட்டுப்பாடு, கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றைப் பெறுகிறது.

இந்த பைக்கின் எடை 264 கிலோ பெற்று 20 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்டு KYB USD ஃபோர்க்ஸ் முன்புறம் மற்றும் இணைப்பு வகை KYB பின்புற ஷாக் அப்சார்பரை கொண்டுள்ளது. பிரேக்குகள் இப்போது பிரெம்போ ஸ்டைல்மா பெற்றுள்ளது. இந்த பைக்கில் 120 பிரிவு முன் மற்றும் 190 பிரிவு பின்புற ரப்பர் புதிய 7 ஸ்போக் வீலை கொண்டுள்ளன.

சர்வதேச அளவில் அடுத்த சில மாதங்களுக்கு பிறகு விற்பனைக்கு கிடைக்க உள்ள 2021 சுசூகி ஹயாபுசா இந்திய சந்தைக்கு சற்று தாமதமாக கிடைக்க துவங்கும்.

Exit mobile version