2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் விற்பனைக்கு அறிமுகமானது

0

2021 tvs star city plus

ரூ.68,465 விலையில் வெளியிடப்பட்டுள்ள புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் டூயல் டோன் நிறம் உட்பட டிஸ்க் பிரேக் பெற்ற வேரியண்ட் ஆகிய வசதிகளை பெற்றுள்ளது. தற்போது விற்பனையில் கிடைத்து வந்த மாடல் டிரம் பிரேக் மட்டும் பெற்றிருந்தது.

Google News

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் சிறப்புகள்

ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கின் முக்கியமான மாற்றமாக விளங்குகின்ற ETFi or Eco-Thrust fuel injection பெற்ற என்ஜின் ஆகும். தற்போது, விற்பனைக்கு வந்துள்ள மாடல் 109 சிசி, ஏர்-கூல்ட் என்ஜின் மூலம் இயக்கப்பட்டு 8.3 பிஹெச்பி பவர் மற்றும் 8.7 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ ஆகும்.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் கொண்டிருக்கும். இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் கொண்ட மாடலில் சிங்கிள் டோன் எனப்படும் ஒற்றை நிறம் மற்றும் முன்புற டயரில் டிஸ்க் பிரேக் பெற்ற மாடலில் டூயல் டோன் என இரு விதமான வேரியண்டில் கிடைக்க துவங்கியுள்ளது.

எல்இடி ஹெட்லைட், புதுப்பிக்கப்பட்ட ஹெஅட்லைட் வைசர், ரியர் வியூ மிரர் போன்றவற்றுடன் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.