ரூ. 9.98 லட்சத்தில் கவாஸாகி நின்ஜா 1000 பைக் களமிறங்கியது..!

0

இந்தியா கவாஸாகி நிறுவனம் புதிய 2017 கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் மாடலை ரூ. 9.98 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு 20 நின்ஜா 1000 பைக்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

2017 kawasaki ninja 1000 launched

Google News

கவாஸாகி நின்ஜா 1000

இந்திய சந்தையில் எஸ்கேடி முறையில் மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2017 கவாஸாகி நின்ஜா 1000 மாடலில் பல்வேறு வசதிகளுடன் மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் அனுபவத்தினை வழங்கவல்ல சூப்பர் பைக் மாடலாகும்.

kawasaki ninja 1000 launched

புனே அருகே அமைந்துள்ள சக்கன் ஆலையில் ஒருங்கினைக்கப்படுகின்ற நின்ஜா 1000 பைக்கில் 1043சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 140 bhp ஆற்றலுடன் 111 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது.

முன்பு விற்பனை செய்யப்பட்ட மாடலை விட ரூ. 2.50 லட்சத்துக்கு குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடலில் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கன்ட்ரோல் மற்றும் இசியூ போன்றவற்றை பெற்று விளங்குகின்றது. இந்தியாவில் கிரே மற்றும் பச்சை வண்ணங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

20 பைக்குகள் மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ள கவாஸாகி நின்ஜா 1000 பைக் விலை ரூ. 9.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) ஆகும்.

2017 kawasaki ninja 1000

2017 kawasaki ninja 1000 rear

மேலும் கூடுதலான ஆக்செரீஸ் கிட்கள் நீக்கப்பட்ட இசட்900 பைக் ரூ. 7.98 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.