2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக் விற்பனைக்கு வந்தது

0

2018 Hero Super Splendor unveiled

கடந்த வருடம் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட 2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக் மாடல் ரூ. 56,920 விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. முந்தைய மாடலை விட புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக் ஐ3எஸ் அம்சத்துடன் கூடுதல் பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தும் மாடலாக வந்துள்ளது.

Google News

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர்

2018 Hero Super Splendor side

125சிசி சந்தையில் இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் அதிகபட்ச மைலேஜ், கூடுதல் பவர் மற்றும் டார்க் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

விற்பனையில் உள்ள சூப்பர் ஸ்பிளென்டர் பைக்கை விட கூடுதலான மைலேஜ் மற்றும் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சூப்பர் ஸ்பிளெண்டரில் தோற்ற பொலிவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.  நவீன தலைமுறையினர் விரும்பும் வகையிலான பாடி கிராபிக்ஸ் , க்ரோம் பூச்சூ பெற்ற சைலன்சர், சில்வர் பூச்சூ கொண்ட ஸ்பிளென்டர் மாடலில் கருப்பு நிறுத்துடன் பாடி கிராபிக்ஸ், கருப்பு நிறத்துடன் சிவப்பு நிற பாடி கிராபிக்ஸ், கருப்பு நிறத்துடன் சில்வர் கிராபிக்ஸ், சிவப்பு மற்றும் கிரே நிறுத்துடன் கூடிய கிராபிக்ஸ் ஆகியவற்றுடன் மொத்தம் 5 நிறங்களில் கிடைக்க உள்ளது.

புதிய சூப்பர் ஸ்பிளென்டர் பைக்கில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன், சைட் ஸ்டான்டு இன்டிகேட்டர் மற்றும் அகலமான பின்புற டயருடன் கூடுதலாக இருக்கையின் அடிப்பகுதியில் ஸ்டோரேஜ் வசதி மற்றும் பெட்ரோல் டேங்க் அடிப்பகுதியில் ஸ்டோரேஜ் வசதி கூடுதலாக பெற்றுள்ளது.

2018 Hero Super Splendor engine

i3S நுட்பத்தை பெற்ற 125 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 11.2 bhp பவரையும், 11Nm டார்க் திறனையும் வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இது முந்தைய மாடலை விட எஞ்சின் 27 சதவீதம் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் திறனையும், 6 சதவீதம் கூடுதல் டார்க் திறனையும் வழங்கும் என ஹீரோ மோட்டோகார்ப் குறிப்பிட்டுள்ளது.

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக் அதிகபட்சமாக மணிக்கு 94 கிமீ வேகம் பயணிக்கும் திறன் கொண்டதாக வெளியாகியுள்ளது.

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக் விலை ரூ.56,920 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

2018 Super Splendor

ஹீரோ ஸ்பிளென்டர் அறிமுபத்தின் போது பேசிய அசோக் பாசின், தலைமை -. விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவு தலைவர், ஹீரோ மோட்டோகார்ப், ” இந்திய நாட்டில் விற்கப்படும் ஒவ்வொரு விநாடியிலும் ஒரு இருசக்கர வாகனம் ஹீரோ பைக் மாடலாக விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு மோட்டார் சைக்கிள் சந்தையில் , ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 125சிசி சந்தையில் 55 சதவீத பங்களிப்பை பெற்று விளங்கும் நிலையில் , புதிய ஸ்டைல் மற்றும் செயல்திறன் சார்ந்த சூப்பர் ஸ்ப்ளென்டரின் அறிமுகம், இந்த தலைமைத்துவத்தை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கையாகும். இந்த புதிய சூப்பர் ஸ்பெண்டர், இந்தியாவின் மிக நம்பகமான பிராண்டுகளில் ஒன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

2018 hero super splendor