ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்

0

ampere reo

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ரீடெயிலரான அமேசான் இந்தியா இணையதளத்தின் மூலம் ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை கிரீவ்ஸ் காட்டன் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தின் 10 நகரங்களில் தனது 5 மாடல்களை விற்பனை செய்ய துவங்கியுள்ளது.

Google News

ஆம்பியர் மின்சார இரு சக்கர வாகனங்களில்  ஜீல், V-48LA, மேக்னஸ் 60, ரியோ LA மற்றும் ரியோ Li ஆகியவை அமேசானிலிருந்து தேர்ந்தெடுத்து வாங்கலாம். தமிழகத்தில் தேனி, தூத்துக்குடி, உடுமலைப்பேட்டை, திருச்சி, கோபிசெட்டிபாளையம், கோயம்புத்தூர், கரூர் மற்றும் அம்பூர் உள்ளிட்ட நகரங்களுடன் பெங்களூரு,  மூடாபித்ரி, மங்களூர் ஆகிய நகரங்களிலும் கிடைக்கும். இந்த வசதி மிக விரைவில் இந்தியாவின் பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அமேசானிலிருந்து நீங்கள் ஆர்டர் செய்யும் பிற தயாரிப்புகளைப் போல அல்லாமல், இந்த ஸ்கூட்டர்கள் நேரடியாக உங்கள் இல்லதுக்கு வழங்கப்படாது. அதற்கு பதிலாக, வாடிக்கையாளர் அதை முன்பதிவு செய்தவுடன், ஸ்கூட்டரை டெலிவரி பெற அவர்கள் அருகிலுள்ள ஷோரூம் சென்று பெற்றுக் கொள்ளலாம்.