65 கிமீ ரேஞ்சுடன் ஆம்பியர் ரியோ எலைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

ampere reo elite

ஆம்பியர் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புளரின் புதிய குறைந்த ரேஞ்சு பெற்ற ரியோ எலைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.45,099 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லெட் அமில பேட்டரியை கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மின் ஸ்கூட்டரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆக உள்ளது.

முதற்கட்டமாக பெங்களூரு மாநகரில் கிடைக்க துவங்கியுள்ள இந்த புதிய மின் ஸ்கூட்டரை வாங்குவோர் மற்றும் ரூ.1,999 கட்டணமாக செலுத்தி முன்பதிவு செய்வோருக்கு பாதுகாப்பு சார்ந்த நோக்கத்தை வலியுறுத்த ஹெல்மெட் இலவசமாக வழங்கப்படுவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ரியோ எலைட் மின் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள லெட் ஆசிட் பேட்டரியுடன் 250 வாட்ஸ் மோட்டாரை கொண்டு இயக்கப்படுகின்றது. ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் அதிகபட்சமாக 55-65 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் கெர்ப் எடை 86 கிலோ கொண்டுள்ளது மற்றும் இருபக்க டயரிலும் 110 மிமீ டிரம் பிரேக்குகளைப் பெறுகிறது. ஆம்பியர் ரியோ எலைட் எல்இடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், யூ.எஸ்.பி சார்ஜிங் பாயிண்ட் போன்ற அம்சங்களைப் பெறுகிறது, மேலும் இது சிவப்பு, வெள்ளை, நீலம் மற்றும் கருப்பு ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு எட்டு மணி நேரம் தேவைப்படும். இந்த ஸ்கூட்டரை இயக்க ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு அவசியமில்லை.

கிரிவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்ற ஆம்பெர் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர் இதுவரை 50,000 அதிகமான பேட்டரி ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.