ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.5,000 வரை குறைந்தது

0

ampere reo

கோவையை தலைமையிடமாக கொண்ட ஆம்பியர் ஸ்கூட்டர் தயாரிப்பாளரின், அனைத்து மாடல்களின் விலையும் ஜிஎஸ்டி வரி குறைப்பினால் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஜீல் ஸ்கூட்டரின் விலை அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது.

Google News

மத்திய அரசு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 5 சதவீதமாக குறைத்துள்ளது.

க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆம்பியர் நிறுவனத்தை 67 சதவீத பங்களை கையகப்படுத்தியது.  கூடுதலாக 15 சதவீத பங்குகளை ஜூலை மாத மத்தியில் கைப்பற்றி மொத்தமாக தற்போது 81.23 சதவீத பங்குகளை பெற்றுள்ளது.

ஆம்பியர் ஜீல் ஸ்கூட்டர் விலை ரூபாய் 5,000 குறைக்கப்பட்டு தற்போது ரூ.67,000 என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ஃபேம் 2 ஆம் கட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

V-48 LA – ரூ. 34,000

V-48 LI – ரூ. 50,000

மேக்னஸ் – ரூ. 45,000

Reo LI – ரூ. 52,500

Reo LA – ரூ. 40,000

(எக்ஸ்ஷோரூம் பெங்களூரு)