அப்ரிலியா ஸ்ட்ரோம் 125 ஸ்கூட்டரை பற்றி 5 முக்கிய சிறப்பு அம்சங்கள்

0

அப்ரிலியா ஸ்ட்ரோம் 125

அப்ரிலியா நிறுவனத்தின் விலை குறைவான ஸ்கூட்டர் மாடலாக ஸ்ட்ரோம் 125 விற்பனைக்கு ரூபாய் 65,000 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள முக்கிய விபரங்களை தொடர்ந்து இங்கே காணலாம்.

Google News

இந்திய சந்தையில் மிகவும் ஸ்டைலிஷாக விளங்கும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக ஸ்ட்ரோம் 125 விளங்குகின்றது. குறப்பாக இந்த மாடல் அப்ரிலியா எஸ்ஆர் 125 ஸ்கூட்டரை விட ரூ.8,000 வரை விலை குறைவாக அமைந்துள்ளது.

அப்ரிலியா ஸ்ட்ரோம் 125

வெள்ளை நிறத்தை தவிர மற்ற இரு நிறங்களாக சிவப்பு மற்றும் மஞ்சள் என இரு நிறங்களும் உடனடியாக விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. இளைய தலைமுறையினர் விரும்புகின்ற மிகவும் ஸ்டைலிஷான ஸ்கூட்டராக விளங்குகின்றது.

ஸ்டைல்

பெரும்பாலான ஸ்டைலிங் அம்சங்கள் விற்பனையில் உள்ள அப்ரிலியா எஸ்ஆர் 125 போன்றே அமைந்திருக்கின்றது. இரு பேரல்களை கொண்ட ஹெட்லேம்ப், ஸ்டைலிஷான பாடி கிராபிக்ஸ் போன்றவற்றுடன் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது.

என்ஜின்

மூன்று வால்வுகளை கொண்ட ஏர்கூல்டு என்ஜின் பெற்ற 9.5 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 9.8 என்எம் முறுக்கு விசை வெளிப்படுத்தும் 124.49 சிசி என்ஜின் பெற்றிருக்கின்றது.

வசதிகள்

12 அங்குல வீல் பெற்றுள்ள இந்த ஸ்கூட்டரில் டிரம் பிரேக் இரு டயர்களிலும் கொடுக்கப்பட்டு, அடிப்படையான பிரேக்கிங் சார்ந்த பாதுகாப்பு வசதியாக கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

போட்டியாளர்கள்

இந்தியாவில் விற்பனையில் டிவிஎஸ் என்டார்க் 125, ஹோண்டா கிரேசியா போன்றவற்றுடன் நேரடியாக சந்தையை ஏப்ரிலியா ஸ்ட்ரோம் 125 பகிர்ந்து கொள்கின்றது.

ஸ்ட்ரோம் 125 விலை

தற்பொழுது நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான டீலர்களுக்கு வந்தடைந்துள்ள அப்ரிலியா ஸ்ட்ரோம் 125 ஸ்கூட்டர் விலை ரூ.65,000 (எக்ஸ்-ஷோரூம் புனே) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.