ஏப்ரிலியா ஸ்ட்ரோம் 125 ஸ்கூட்டரின் சிறப்புகள்

5c076 aprilia strom

பிஎஸ்6 இன்ஜின் பெற்ற ஏப்ரிலியா ஸ்ட்ரோம் 125 ஸ்கூடரில் டிஸ்க் பிரேக் மாடல் சமீபத்தில் வெளியிடப்படுள்ள நிலையில் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டிலும் உள்ள சிறப்பு வசதிகளை அறிந்து கொள்ளலாம்.

125சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பிரீமியம் விலையில் ஸ்டைலிஷான தோற்ற பொலிவினை கொண்டதாக விளங்குகின்ற ஸ்ட்ரோம் 125யில் பிஎஸ்6 ஆதரவுடன் கூடிய மூன்று வால்வுகளை கொண்ட ஏர் கூல்டு என்ஜின் பெற்று அதிகபட்சமாக 9.7 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 9.60 என்எம் முறுக்கு விசை வெளிப்படுத்தும் 124.49 சிசி என்ஜின் பெற்றிருக்கின்றது

டிசைனிங் அம்சங்களில் மிக நேர்த்தியான கூர்மையான எட்ஜ் அமைப்புகளுடன் இரு பிரிவுகளை பெற்ற ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டதாக உள்ளது. இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக் அல்லது முன்புறத்தில் மட்டும் 200 மிமீ டிஸ்க் பிரேக் பெற்று கூடுதலாக கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுள்ளது.

12 அங்குல வீல் கொண்டுள்ள ஏப்ரிலியா ஸ்ட்ரோம் 125 ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் அமைப்பினை பொறுத்தவரை, முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் பெற்றதாக வந்துள்ளது.

ஏப்ரிலியா ஸ்ட்ரோம் 125 விலை பட்டியல்

ஏப்ரிலியா ஸ்ட்ரோம் 125 டிரம் – ரூ.85,431

ஏப்ரிலியா ஸ்ட்ரோம் 125 டிஸ்க் – ரூ.91,321

(எக்ஸ்ஷோரூம் புனே)

Share
Published by
MR.Durai