ரூ.1.26 லட்சத்தில் ஏப்ரிலியா SXR 160 விற்பனைக்கு வெளியானது

0

Aprilia SXR 160 scooter price

புதிதாக விற்பனைக்கு வந்துள்ள மேக்ஸி ஸ்டைல் ஏப்ரிலியா நிறுவனத்தின் SXR 160 ஸ்கூட்டரின் விலை ரூ.1.26 லட்சம் (எக்ஸ்ஷோரூம் புனே) ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மிக கம்பீரமான தோற்ற அமைப்புடன் நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் குறைந்த விலை சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் 125 ஸ்கூட்டரை எதிர்கொள்ளுகின்றது.

Google News

160 சிசி என்ஜினை பெற்றுள்ள எஸ்.எக்ஸ்.ஆர் 160 ஸ்கூட்டர் அதிகபட்சமாக 10.9 Ps பவர் மற்றும் 11.6 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் மிக சிறப்பான பிரேக்கிங் செயல்திறனை பெற்ற டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டிருக்கின்றது.

முழு எல்இடி விளக்குகள், உயர்த்தப்பட்ட கைப்பிடி, யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட், முழு டிஜிட்டல் கிளஸ்ட்டர் கன்சோல், டிஸ்க் பிரேக் உடன் ஏபிஎஸ், 5 ஸ்போக்குகளை பெற்ற 12 அங்குல அலாய் வீல் பெற்று சிவப்பு, நீலம், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய நான்கு விதமான நிறங்களில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கின்றது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் இணைக்கப்பட்டு டயரில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, பின்புறத்தில் ஒற்றை சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு டயரில் டிரம் பிரேக் உள்ளது. இருக்கைக்கு அடியில் ஸ்டோரேஜ் மற்றும் பூட்டும் வகையில் முன்புறத்தில் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது.