வரவேற்பில்லாத காரணத்தால் ஏதெர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நீக்கம்

0

Ather 450 Electric Scooter

ஏதெர் எனெர்ஜி நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் ஏதெரின் குறைந்த விலை 340 ஸ்கூட்டர் சந்தையிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 99 % ஏதெர் ஸ்கூட்டரை வாங்கும் பயனாளர்களின் முதல் தேர்வாக ஏதெர் 450 விளங்குவதே காராணமாகும்.

Google News

ஏதெர் 340 மின்சார ஸ்கூட்டர் சென்னை ஆன்ரோடு விலை ரூ. 1,10,648 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் 450 ஸ்கூட்டர் விலை  ரூ. 1,22,224 ஆக விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், ஏதெர் 340 ஸ்கூட்டரில் 4.4 kw (5.9 PS) பவர், 20 NM டார்க் திறனையும், இந்த ஸ்கூட்டரில் முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால், 60 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கலாம். ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டர் ஆகும். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 5.1 விநாடிகள் தேவைப்படும்.

ஏத்தர் 450 ஸ்கூட்டரில் 5.4 kw (7.3 PS) பவர்,  20.5 NM வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால், 75 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர் ஆகும். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

2.4 kWh லித்தியம் இயான் பேட்டரி 50,000 கிலோ மீட்டர் வரை உழைக்கும் திறனை கொண்டதாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரி பேக் மிக சிறப்பான பாதுகாப்பு அம்சமாக IP67 எனப்படும், தூசு மற்றும் நீரினால் பாதிப்பு ஏற்படாத வகையில் பேட்டரியை கொண்டுள்ளது.