Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

75 கிமீ ரேஞ்சு.., சென்னையில் ஏதெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கியது

by MR.Durai
20 October 2019, 6:45 pm
in Bike News
0
ShareTweetSend

Ather 450 Electric Scooter

13 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் தொடங்கப்பட்ட ஏதெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் தற்பொழுது சென்னை மாநகரில் தனது முதல் ஏதெர் 450 ஸ்கூட்டரை விநியோகிக்க துவங்கியுள்ளது. கடந்த ஜூலை 2019 சென்னையில் முன்பதிவு துவங்கப்பட்ட இந்த ஸ்கூட்டருக்கு முதல் டெலிவரி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குள் 100க்கு அதிகமான இ-ஸ்கூட்டர்களை இந்நிறுவனம் விநியோகிக்க உள்ளது.

சென்னையில் தற்பொழுது 10 க்கு அதிகமான இடங்களில் ஏதெர் க்ரீட் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை இந்நிறுவனம் நிறுவிவுள்ளது. மேலும், ஒவ்வொரு 4 கிமீ-க்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ திட்டமிட்டுள்ளதால், சென்னையில் மட்டும் 30க்கு அதிகமான சார்ஜிங் நிலையங்களை திறக்க உள்ளது. ஏதெர் ஸ்கூட்டர்களுக்கு இலவசமாக சார்ஜிங் செய்ய டிசம்பர் 2019 வரை அனுமதிக்கப்பட உள்ளது.

ஏதெர் எனெர்ஜி சென்னையில் 2019 ஜூலை முதல் புக்கிங் தொடங்கிய நிலையில், 2019 டிசம்பர் வரை விற்பனை செய்ய உள்ள மாடல்களுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் நிறைவடைந்துள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அடுத்த, 3வது பேட்ச் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான டெலிவரி பிப்ரவரி முதல் மார்ச் 2020 வரையிலான காலங்களில் தங்கள் ஏதெர் 450 ஸ்கூட்டரை பெறலாம்.  இரு சக்கர எலெக்ட்ரிக் வாகன நிறுவனமான ஏதெர் சென்னைக்குப் பிறகு, அடுத்து ஹைதராபாத், புனே, டெல்லி மற்றும் மும்பையில் துவங்க தயாராகி வருகின்றது.

ஏதெர் 450 எலெக்ட்ரிக் சிறப்புகள்

ஏத்தர் 450 ஸ்கூட்டரில் 5.4 kw (7.3 PS) பவர்,  20.5 NM வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால், 75 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர் ஆகும். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

2.4 kWh லித்தியம் இயான் பேட்டரி 50,000 கிலோ மீட்டர் வரை உழைக்கும் திறனை கொண்டதாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரி பேக் மிக சிறப்பான பாதுகாப்பு அம்சமாக IP67 எனப்படும், தூசு மற்றும் நீரினால் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பேட்டரி விளங்கும்.

ஏதெர் 450 ஸ்கூட்டர் ஸ்கூட்டர் விலை ரூ. 1,22,224

(ஆன் ரோடு சென்னை)

இந்நிறுவனம், குறைந்த ரேஞ்சு கொண்ட ஏதெர் 340 மாடலுக்கு போதிய வரவேற்பில்லாத காரணத்தால் நீக்கப்பட்டுள்ளது. பஜாஜ் அர்பனைட் பிராண்டின் முதல் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியிடப்பட்டுள்ளதால், கடுமையான போட்டியை ஏதெர் 450 எதிர்கொள்ள உள்ளது.

Related Motor News

ரூ.76,000 விலையில் BAAS மூலம் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டரை வாங்கலாம்.!

161கிமீ ரேஞ்சுடன் ரூ.1.47 லட்சத்தில் ஏதெர் 450S விற்பனைக்கு வெளியானது

ஏதெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.6,000 வரை உயருகின்றது..!

ஐபிஓ வெளியீட்டுக்கு தயாராகும் ஏதெர் எனர்ஜி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்பொழுது.?

3வது ஆலைக்கு ரூ.2,000 கோடி முதலீட்டை மேற்கொள்ளும் ஏதெர் எனர்ஜி

டிவிஎஸ் ஐக்யூப் Vs பஜாஜ் சேட்டக் Vs ஏதெர் 450 – எது பெஸ்ட் சாய்ஸ்

Tags: Ather 450
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hero 125 million special edition

12.5 கோடி இரு சக்கர வாகனங்களை விற்ற ஹீரோ மோட்டோகார்ப்

tvs iqube smart watch

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

130கிமீ ரேஞ்ச் வழங்கும் ஹோண்டா WN7 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

ரூ.28.99 லட்சத்தில் 2025 ஹோண்டா CBR1000RR-R Fireblade SP அறிமுகமானது

ரூ.19.90 லட்சத்தில் பிஎம்டபிள்யூ S 1000 R பைக் விற்பனைக்கு வந்தது

ரூ.1.96 லட்சத்தில் 2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 அறிமுகமானது

நியோ ரெட்ரோ யமஹா XSR 155 நவம்பர் 11ல் அறிமுகம்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டின் 350cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலைப்பட்டியல்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

ரூ.97,436 விலையில் டிவிஎஸ் ஜூபிடர் 110ல் ஸ்பெஷல் எடிசன் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan