Automobile Tamilan

விரைவில் ஏதெர் 450 மின்சார ஸ்கூட்டர் நீக்கப்படுகின்றது

ஏத்தர் 450

ஏதெர் எணர்ஜி நிறுவனம் தனது மிக சிறப்பான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக கொண்டிருக்கின்ற 450 மாடலின் மேம்பட்ட 450எக்ஸ் ஸ்கூட்டரை விற்பனைக்கு வெளியிட்டுள்ளதை தொடர்ந்து, அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனையில் உள்ள ஏதெர் 450 நீக்கப்படுவதனை உறுதி செய்துள்ளது.

ஜூலை 2020 முதல் ஏதெர் 450 எக்ஸ் ஸ்கூட்டர் விநோயோகிக்க உள்ள நிலையில், அதன் பிறகே ஏதெர் 450 மாடல் நீக்கப்பட உள்ளது. சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டும் கிடைத்து வருகின்றது. இந்நிலையில் இந்நிறுவனம் புதிதாக வெளிவதுள்ள 450 எக்ஸ் சென்னை, பெங்களூருவை தவிர டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதி, ஹைத்திராபாத், மும்பை மற்றும் புனே. அடுத்த சில மாதங்களுக்குள் கோவை, கொச்சி, வதோத்ரா  மற்றும் அகமதாபாத் நகரங்களில் வெளியிட உள்ளது.

விற்பனையில் உள்ள ஏத்தர் 450 மாடல்  5.4 kw (7.3 PS) பவர்,  20.5 NM வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால், 75 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர் ஆகும். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

விற்பனைக்கு வந்துள்ள புதிய ஏத்தர் 450 எக்ஸ் 6 கிலோ வாட் (5.4kW – ப்ரோ) எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 26 என்எம் டார்க் (22 என்எம் டார்க்) வெளிப்படுத்தும். 108 கிலோ கிராம் எடை கொண்ட 450 எக்ஸ் ஸ்கூட்டரில் 0- 40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.29 விநாடிகளும், 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.50 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கின்றது.

முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால், 85 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம்.

ஏதெர் 450 எக்ஸ் விலை ரூ.99,000 (எக்ஸ்ஷோரூம்) ஆகும். நீங்கள் வாங்கும் முறையில் மாதந்தோறும் சந்தா கட்டணமாக பிளஸ் வேரியண்டிற்கு ரூ.1,699 மற்றும் ப்ரோ வேரியண்டிற்கு ரூ.1,999 செலுத்த வேண்டும்.

மாற்றாக 450 எக்ஸ் பிளஸ் விலை ரூ. 1.49 லட்சம் மற்றும் 450 எக்ஸ் ப்ரோவின் விலை ரூ.1.59 லட்சம் ஆகும். (எக்ஸ்ஷோரூம் விலை) இந்த பிளானை பொறுத்த வரை மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படாது. மூன்று வருடம் மட்டுமே பேட்டரி வாரண்டி வழங்கப்படும். ஆனால் ஏதெர் கனெக்ட் எனப்படுகின்ற OTA மேம்பாடு, இலவச ஃபாஸ்ட் சார்ஜிங் பெற கட்டணம் செலுத்த வேண்டும்.

Exit mobile version