விரைவில்., சென்னையில் ஏதெர் 450 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்

Ather 450 Electric Scooter

வரும் ஜூலை 9 ஆம் தேதி சென்னையில் ஏதெர் எனெர்ஜி நிறுவனத்தின், ஏதெர் 450 எலெகட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியாக உள்ளது. மிகவும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்புடன் நவீன அம்சங்களை உள்ளடக்கிய ஏதெர் நிறுவன ஸ்கூட்டர்கள் பெங்களூருவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த சில வாரங்களாக முன்பதிவு நடைபெற்று வருகின்ற ஏத்தர் 450 ஸ்கூடரின் விற்பனை சென்னையில் தொடங்கப்பட உள்ள நிலையில் முக்கிய இடங்களில் தனது ஏதெர் கிரிட் வாயிலாக சார்ஜிங் நிலையங்களை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் மத்திய அரசின் பேம் 2 ஆம் கட்ட ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் தனது ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது.

ஏத்தர் நிறுவனம், ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது. பொதுவாக இந்நிறுவனத்தின் ஏத்தர் 450 மாடல் அதிகப்படியான வாடிக்கையாளர்களின் தேர்வாக அமைந்துள்ளது. எனவே, சென்னையில் ஏதெர் 450 மாடலை முதற்கட்டமாக வெளியிட உள்ளது.

ஏத்தர் 450 ஸ்கூட்டரில் 5.4 kw (7.3 PS) பவர்,  20.5 NM வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால், 75 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர் ஆகும். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

2.4 kWh லித்தியம் இயான் பேட்டரி 50,000 கிலோ மீட்டர் வரை உழைக்கும் திறனை கொண்டதாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரி பேக் மிக சிறப்பான பாதுகாப்பு அம்சமாக IP67 எனப்படும், தூசு மற்றும் நீரினால் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பேட்டரி விளங்கும்.

Ather 450 Electric Scooter

340 ஸ்கூட்டரில் 4.4 kw (5.9 PS) பவர், 20 NM டார்க் திறனையும், இந்த ஸ்கூட்டரில் முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால், 60 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கலாம். ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டர் ஆகும். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 5.1 விநாடிகள் தேவைப்படும்.

ஏத்தர் 340 மின்சார ஸ்கூட்டர் விலை ரூ. 1.19 லட்சம்

ஏத்தர் 450 ஸ்கூட்டர் ஸ்கூட்டர் விலை ரூ. 1.31 லட்சம்

(ஆன் ரோடு சென்னை)

Exit mobile version