ரூ.81,036 விலையில் பஜாஜ் அவென்ஜர் 160 விற்பனைக்கு அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், புதிய பஜாஜ் அவென்ஜர் 160 பைக் மாடல் முன்பு விற்பனை செய்யப்பட்ட அவென்ஜர் 180 பைக்கிற்கு மாற்றாக விற்பனைக்கு வெளிவந்துள்ளது. அடுத்த சில வாரங்களுக்குள் நாடு முழுவதும் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

அவென்ஜர் 220 மற்றும் அவென்ஜர் 180 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பது ஏபிஎஸ் இணைக்கப்பட்டு விலை குறைந்த க்ரூஸர் ரக பைக் மாடலாக அவென்ஜர் 160 விளங்குகின்றது.

பஜாஜ் அவென்ஜர் 160 விலை மற்றும் சிறப்புகள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற குறைந்த விலை கொண்ட க்ரூஸர் ரக மாடலாக அவென்ஜர் வரிசை மற்றும் சுசூகி இன்ட்ரூடர் பைக் மாடல்கள் விளங்குகின்றது. தற்போது வந்துள்ள 160 சிசி என்ஜின் பெற்ற மாடல் முந்தைய ஏபிஎஸ் அல்லாத அவென்ஜர் 180 மாடலை விட ரூ.7000 விலை குறைவாக அமைந்துள்ளது.

பல்சர் என்எஸ் 160 பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற என்ஜினில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல், அவென்ஜர் 160-ல் அதிகபட்சமாக 15.5hp குதிரைத்திறன் மற்றும் 14.6 Nm முறுக்குவிசை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

அவென்ஜர் 180 மாடலின் வசதிகளை தொடர்ந்து பெற்றுள்ள அவென்ஜர் 160-ல் குறிப்பாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த பைக் வரிசையில் இடம்பெற்றிருந்த அவென்ஜர் 180 பைக் கைவிடப்பட்டுள்ளது.

பஜாஜ் அவென்ஜர் 160 பைக்கின் விலை ரூ.81,036 (விற்பனையக விலை) புனே ஆகும். இனி, இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸர் என்ற பெருமையை இந்த பைக் பெற்றுள்ளது.

Exit mobile version