பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் 180இந்தியாவில் தொடக்கநிலை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற க்ரூஸர் ரக மாடலான அவென்ஜர் பைக்கில் 180சிசி எஞ்சினை பெற்ற புதிய பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் 180 பைக் ரூ. 83,475 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் 180

பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் 180

சந்தையில் விற்பனை செய்யபட்டு வந்த அவென்ஜர் 150 மாடலுக்கு மாற்றாக நிலை நிறுத்தப்பட்டுள்ள அவென்ஜர் 180 பைக் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 பைக்கின் தோற்ற பொலிவினை கொண்டதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய இரு வண்ணங்களில் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ள அவென்ஜர் 180 மாடல் அவென்ஜர் 220 ஸ்டீரிட் மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்சர் 180 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே எஞ்சினை பெற்றுள்ள அவென்ஜர் 180 எஞ்சின் அதிகபட்சமாக 15.5 HP பவர் மற்றும் 13.7 Nm டார்க் வழங்ககின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டிருப்பதுடன் க்ரூஸர் ரக மாடல்களுக்கு ஏற்ற வகையில் எஞ்சின் தன்மை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அவென்ஜர் 220 பைக்கில் உள்ளதை போன்று டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறாமல், வந்துள்ள 180 மாடலில் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லேட் மற்றும் 27 சதவீத கூடுதல் சொகுசு தன்மையை வழங்கக்கூடிய இருக்கையை பெற்றுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் 260 மிமீ டிஸ்க் பிரேக்கினை டயரில் கொண்டிருக்கும் , பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்று 130மிமீ டிரம் பிரேக்கினை கொண்டிருக்கின்றது.

விற்பனையிலிருந்து நீக்கப்பட்ட பஜாஜ் அவென்ஜர் 150 பைக் மாடலை விட ரூ.3000 விலை அதிகரிக்கப்பட்டு , அவென்ஜர் 220 வரிசையை விட ரூ.10,000 விலை குறைந்ததாக பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் 180 மாடல் விளங்குகின்றது.

பஜாஜ் அவென்ஜர் பைக் விலை பட்டியல்

2018 Bajaj Avenger Street 180 Rs 83,475
2018 Bajaj Avenger Street 220 Rs 93,466
2018 Bajaj Avenger Cruise 220 Rs 93,466

 

all prices ex-showroom Delhi