Automobile Tamil

24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்

chetak

புனே மற்றும் பெங்களூருவில் கிடைக்கின்ற பஜாஜின் சேட்டக் மின் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை நகரங்களை 24 ஆக FY22-ல் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் ஏதெர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஸ்கூட்டர் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் வெளியான சேட்டக் மற்றும் டிவிஎஸ் ஐகியூப் ஆகியவை அமோகமான துவக்க நிலை வரவேற்பினை கொண்டுள்ளது.

மணி கன்ட்ரோல் இணையதளத்திற்கு பேசிய பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் சர்மா கூறியதாவது: “இந்த நேரத்தில் அதிகமான நகரங்களைச் சேர்ப்பதற்கான இலக்கை நாங்கள் இன்னும் எட்டவில்லை. இது சற்று ஏமாற்றமளிக்கிறது. ஏனெனில், நாங்கள் விநியோகச் சங்கிலி சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளோம். கொரானோ பரவலுக்கு பிறகு எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் பெறுவதில் சிக்கல் அதிகரித்தது. சேட்டக்கிற்கான முன்பதிவுகளை மீண்டும் திறப்பதில் நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்றோம். ” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிறுவனம், வரும் 2021-2022 நிதி ஆண்டில் நாட்டின் 24 முன்னணி நகரங்களில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

சேட்டக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

சேட்டக் ஸ்கூட்டரில் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என இரண்டு ரைடிங் மோடுகள் மற்றொரு ரிவர்ஸ் அசிஸ்ட் மோடும் வழங்கப்பட்டுள்ளது. சேட்டக் மின்  ஸ்கூட்டரை 5 மணி நேரத்தில் முழுமையான சார்ஜிங் பெறக்கூடிய 3.4 கிலோ வாட் ஹவர் லித்தியம் ஐயன் பேட்டரியை கொண்டுள்ள சேட்டக்கில் 80 சதவீத சார்ஜிங்கை 3 மணி நேரம் 50 நிடங்களில் பெற இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 4 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பெற்றுள்ள இந்த மாடல் முழுமையான 100 சதவீத சார்ஜ் உள்ள சமயத்தில் ஈக்கோ மோடில் பயணித்தால் 95 கிமீ ரேஞ்சு வழங்கும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version