Automobile Tamil

விரைவில்.., சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவை தொடங்கும் பஜாஜ் ஆட்டோ

bajaj chetak

பஜாஜ் நிறுவனத்தின் அர்பனைட் பிராண்டில் வந்துள்ள புதிய சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆன்லைன் வழியாக மற்றும் கேடிஎம் டீலர்கள் வாயிலாக முன்பதிவை அடுத்த மாதம் முதல் தொடங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட சேத்தக் முதற்கட்டமாக புனே மற்றும் பெங்களூரு நகரங்களில் பஜாஜின் கேடிஎம் டீலர்கள் மூலம் ஜனவரி முதல் விற்பனை தொடங்கப்பட உள்ள நிலையில், இதற்கான முன்பதிவை விரைவில் தொடங்க உள்ளதாக பைக்தேக்கோ தளம் குறிப்பிட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பஜாஜ் மீண்டும் ஸ்கூட்டர் தயாரிப்பில் களமிறங்கியுள்ள நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக தயாரிப்பதனால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

புதிய சேட்டக்கில் ஐபி 67 சான்றிதழ் பெறப்பட்ட உயர் தொழில்நுட்ப லித்தியம் அயன் பேட்டரி NCA வசதியுடன் அமைந்துள்ளது. இது ஒரு நிலையான வீட்டு 5-15 ஆம்பியர் மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்வதற்கான அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்-போர்டு நுண்ணறிவு பேட்டரி மேலாண்மை அமைப்பு (ஐபிஎம்எஸ்) கட்டணம் மற்றும் வெளியேற்றத்தை தடையின்றி கட்டுப்படுத்துகிறது. சேட்டக் ஸ்கூட்டரில் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என இரண்டு ரைடிங் மோடுகளுடன் மற்றொரு ரிவர்ஸ் அசிஸ்ட் மோடும் வழங்கப்பட்டுள்ளது. மிக சிறப்பான வகைய்யில் பிரேக்கிங் சிஸ்டம் வழியாக ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது.

சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் ஒன் சைடேட் ஸ்பீரிங் செட்டப் சஸ்பென்ஷனும், 12 அங்குல கேஸ்ட் அலாய் வீல் பெற்ற இந்த ஸ்கூட்டரில், முன்பக்க டயரில் டிஸ்க் பிரேக், பின்புறத்தில் டிரம் பிரேக் வழங்க்கப்பட்டு சிபிஎஸ் பிரேக் இணைக்கப்படலாம். மேலும் 90/90 எம்.ஆர்.எஃப் ஜேப்பர் கே டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4 கிலோவாட் மின்சார் மோட்டார் பொருத்தப்பட்டு ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என இரண்டு ரைடிங் மோடுகள் மற்றொரு ரிவர்ஸ் அசிஸ்ட் மோடும் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 60 கிமீ வேகத்தில் பயணிக்கின்ற ஸ்போர்ட் மோட் மூலம் 85 கிமீ பயண தூரத்தையும், அதுவே ஈக்கோ மோட் மூலம் 45-50 கிமீ வேகத்தில் பயணித்தால் 95 – 100 கிமீ வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் ரேஞ்சு 120 கிமீ ஆக அறிமுகம் செய்யப்படலாம்.

ஏத்தர் 450ஓகினாவா பிரைஸ் சீரிஸ் மற்றும் வரவிருக்கும் டிவிஎஸ் க்ரியோன் போன்ற மாடல்களுக்கு சவாலாக விளங்க உள்ள பஜாஜ் சேத்தக் விலை ரூ.1.30 லட்சத்தில் அமையலாம். தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த ஆண்டின் மத்தியில் இந்த ஸ்கூட்டர் வெளியாகலாம்.

Exit mobile version