Home Bike News

95 கிமீ ரேஞ்சு.., பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது

பஜாஜ் சேட்டக்

மிகவும் ஸ்டைலிஷான ரெட்ரோ தோற்ற அமைப்பினை வெளிப்படுத்துகின்ற பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தனது முந்தைய சேட்டக் மாடலை நினைவுப்படுத்தும் நோக்கில் ஹமாரா கால் என்ற கோஷத்துடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகம் செய்து வைத்தார்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்கூட்டர் சந்தையில் நுழைந்துள்ள நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டு களமிறங்கியுள்ளது. இந்நிறுவனம், தற்பொழுது தயாரிக்கின்ற 40 % வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. கடந்த செப்., 25, 2019 முதல் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி தொடங்கப்பட்டு விட்டது. முதற்கட்டமாக ஜனவரி 20 ஆம் தேதி முதல் புனே, பெங்களூரு மற்றும் மேற்கு இந்தியா உட்பட பல்வேறு முன்னணி நகரங்களில் படிப்படியாக விரிவுப்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

ஸ்டைலிஷான ரெட்ரோ மற்றும் மாடர்ன் ஸ்கூட்டர்களுக்கு இணையான வசதியை கொண்டு வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் மற்றும் வட்ட வடிவ  TFT டிஜிட்டல் கிளஸ்ட்டரை சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்று முழுமையான மெட்டல் பாடி கொண்டதாக விளங்குகின்றது. இந்த பைக்கில் எந்தவொரு கிராபிக்ஸ் அம்சங்களும் இடம்பெறாமல் பிளைனாக அமைந்துள்ளது. இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது.

புதிய சேட்டக்கில் ஐபி 67 சான்றிதழ் பெறப்பட்ட உயர் தொழில்நுட்ப லித்தியம் அயன் பேட்டரி NCA வசதியுடன் அமைந்துள்ளது. இது ஒரு நிலையான வீட்டு 5-15 ஆம்பியர் மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்வதற்கான அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்-போர்டு நுண்ணறிவு பேட்டரி மேலாண்மை அமைப்பு (ஐபிஎம்எஸ்) கட்டணம் மற்றும் வெளியேற்றத்தை தடையின்றி கட்டுப்படுத்துகிறது. சேட்டக் ஸ்கூட்டரில் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என இரண்டு ரைடிங் மோடுகற் மற்றொரு ரிவர்ஸ் அசிஸ்ட் மோடும் வழங்கப்பட்டுள்ளது. மிக சிறப்பான வகைய்யில் பிரேக்கிங் சிஸ்டம் வழியாக ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது.

பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4 கிலோவாட் மின்சார் மோட்டார் பொருத்தப்பட்டு ரேஞ்சு ஈக்கோ மோடில் 95 கிமீ ஆகவும், அதே ஸ்போர்ட் மோடில் பயணித்தால் 85 கிமீ பயணிக்கவும் வழிவகை செய்ய உள்ளது. இந்த ஸகூட்டரின் அனைத்து விதமான செயல்பாடுகளும் சேட்டக் ஆப் வாயிலாக கண்கானிக்கப்பட்டு பேட்டரியின் ரேஞ்சு உட்பட ஓட்டுதல் சார்ந்த அனைத்து திறன்களுக்கான தகவல்களையும் பயனர்களுக்கு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1.50 லட்சத்திற்குள் அமைந்திருக்கும்.

Exit mobile version