பஜாஜ் CT100 எலக்ட்ரிக் ஸ்டார்ட் பைக் விற்பனைக்கு அறிமுகம்

தமிழ்நாடு எக்ஸ்-ஷோரும் விலை ரூ. 39,729 என வெளியிடப்பட்டுள்ள பஜாஜ் CT100 ES பைக் மாடல் குறைந்த விலை தொடக்கநிலை கம்யூட்டர் சந்தையில் பஜாஜ் நிறுவனத்தின் 4வது வேரியன்ட் ஆகும்.

பஜாஜ் CT100 ES

இந்தியாவின் மிக விலை குறைந்த இருசக்கர மோட்டார் சைக்கிள்களில் ஒன்றான பஜாஜ் சிடி 100 பைக்கின் ஆரம்ப விலை ரூ. 31,716 (சிடி 100B) முதல் தொடங்குகின்றது. தற்போது வெளியாகியுள்ள புதிய வேரியன்டில் எலக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் அலாய் வீல் பெற்று 102 சிசி எஞ்சினை பெற்றுள்ளது.

தொடக்கநிலை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சிடி 100 எலக்ட்ரிக் ஸ்டார்ட் மாடலில் கருப்பு மற்றும் சில்வர் நிறத்துடன் கூடிய சிவப்பு ஸ்டிக்கரிங்,   கருப்பு மற்றும் சில்வர் நிறத்துடன் கூடிய நீல ஸ்டிக்கரிங் மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களுடன் கிடைக்க உள்ள இந்த பைக்கில் மிக அகலமான இருக்கை வழங்கப்பட்டிருப்பதுடன் நீண்ட தூர பயணத்திற்கும் ஏற்ற வகையில் சிறப்பான சொகுசு தன்மையை வழங்கும்  SNS (Spring in Spring Suspension) இடம்பெற்றுள்ளது.

CT 100B,  CT 100 ஸ்போக் மற்றும் CT 100 அலாய் ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள 99.27சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் புதிதாக வந்துள்ள பஜாஜ் CT100 ES மாடலில் 7.6 bhp மற்றும் 8.24 NM டார்க்கினை வழங்கும் 102சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

விற்பனையில் உள்ள ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் , ஹோண்டா CD 110 ட்ரீம் போன்றவற்றுக்கு போட்டியாக  பஜாஜ் CT100 எலக்ட்ரிக் ஸ்டார்ட் ரூ.39,729 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

Recommended For You