மீண்டும் பஜாஜ் டொமினார் 400 பைக் விலை உயர்வு – தமிழக விலை விபரம்

0

பஜாஜின் மாடர்ன் பவர்க்ரூஸர் மாடலாக விளங்கும் பஜாஜ் டொமினார் 400 பைக் விலை மீண்டும் ரூ.1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் பஜாஜ் டொமினார் 400 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.41,677 ஆகும்.

Bajaj Dominar 400 bike

Google News

டொமினார் 400 விலை உயர்வு

இந்தியாவைச் சேர்ந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சக்திவாய்ந்த முதல் மாடலாக 2016 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டோமினார் 400 பைக் அறிமுகத்தின் பொழுது ரூ.1.38 லட்சம் என தொடங்கப்பட்ட அடிப்படை வேரியன்ட் தற்போது இரு முறை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ரூ. 1.41 லட்சத்தை எட்டியுள்ளது.

இந்த பைக், மெட்ரோ நகரங்கள் மற்றும் குறிப்பிட்ட சில முன்னணி நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அடுத்த சில மாதங்களில் மேலும் டீலர்களின் எண்ணிக்கையை பஜாஜ் அதிகரிக்க உள்ளதால் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும், மாதந்திர நிலவரப்படி சராசரியாக 3000 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் தற்போது, சென்னை, கோவை, மதுரை மற்றும் நாகர்கோவில் நகரங்களிலும் இதுதவிர, புதுச்சேரியிலும் டோமினார் 400 கிடைக்கின்றது.

bajaj dominar 400 price

டொமினார் 400 எஞ்சின் விபரம்

ஸ்போர்ட்டிவ் பைக் தயாரிப்பாளரான கேடிஎம் நிறுவனத்தின் கேடிஎம் டியூக் 390 பைக்கில் இடம்பெற்ற அதே 373 சிசி எஞ்சின் டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்துடன்  34.50 hp பவரை 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றுள்ளது.  இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.

டோமினார் 400 பைக்கின் உச்ச வேகம் மணிக்கு 148 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

  • என்ஜின் – 373cc
  • பவர் – 34.5 bhp @ 8000rpm
  • டார்க்: 35Nm @ 8500rpm
  • கியர்பாக்ஸ் – 6 வேகம்
  • எடை – 182 kg
  • எரிபொருள் கலன் – 13 லிட்டர்

 

 

பஜாஜ் டோமினார் 400 பைக் புதிய விலை பட்டியல்

டோமினார் 400 பைக் விலை ரூ. 1.41,677 லட்சம் (டிஸ்க் பிரேக்)

டோமினார் 400 பைக் விலை ரூ. 1.55,927 லட்சம் ( ட்வீன் சேனல் ஏபிஎஸ் மாடல்)

( தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் விலை )

டோமினார் 400 பைக் விலை ரூ. 1.33,353 லட்சம் (டிஸ்க் பிரேக்)

டோமினார் 400 பைக் விலை ரூ. 1.46,794 லட்சம் ( ட்வீன் சேனல் ஏபிஎஸ் மாடல்)

( புதுச்சேரி எக்ஸ்-ஷோரூம் விலை )