2018 பஜாஜ் டோமினார் பைக் விலை ரூ.2000 உயர்ந்தது

0

கடந்த ஜனவரி 2018யில் வெளியான மேம்படுத்தப்பட்ட பஜாஜ் டோமினார் பைக் விலை தற்போது ரூ.2000 வரை அதிகரிக்கப்பட்டு, புதிய நிறத்தை கொண்டதாக எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் விலையை பஜாஜ் ஆட்டோ உயர்த்தியுள்ளது.

சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அங்கமான ஸ்போர்ட்டிவ் பைக் தயாரிப்பாளரான கேடிஎம் நிறுவனத்தின் கேடிஎம் டியூக் 390 பைக்கில் இடம்பெற்ற அதே 373 சிசி எஞ்சின் டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்துடன்  34.50 hp பவரை 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும்.  இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.  டோமினார் 400 பைக்கின் உச்ச வேகம் மணிக்கு 148 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

  • என்ஜின் – 373cc
  • பவர் – 34.5 bhp @ 8000rpm
  • டார்க்: 35Nm @ 8500rpm
  • கியர்பாக்ஸ் – 6 வேகம்
  • எடை – 182 kg
  • எரிபொருள் கலன் – 13 லிட்டர்

டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , முன்பக்கத்தில் 43மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மல்டிஸ்டெப் மோனோஷாக் அப்சார்பர் பின்புறத்தில் என பல வசதிகளை பெற்றதாக இருக்கும்.

ட்வீன் சேனல் ஏபிஎஸ் பிரேக் அம்சமானது டாப் வேரியன்டில் ஆப்ஷனலாக கிடைக்கின்றது. மேலும் ஏபிஎஸ் இல்லாத மாடலும் டிஸ்க் பிரேக் மாடல் சமீபத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும் இந்த மாடலும் ரூ.2000 விலை உயர்வை சந்தித்துள்ளது.

பஜாஜ் டோமினார் டிஸ்க் ரூ. 1.44 லட்சம்

பஜாஜ் டோமினார் ஏபிஎஸ் ரூ. 1.58 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம்)