ரூ.92,198 விலையில் பஜாஜ் பல்சர் 125 கார்பன் ஃபைபர் பைக் அறிமுகம்

0

bajaj pulsar 125 carbon fiber red

பிரசத்தி பெற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தொடக்க நிலை பல்சர் 125 பைக்கில் கார்பன் ஃபைபர் எடிசன் என்ற பெயரில் சிறிய அளவில் கார்பன் ஃபைபர் கிராபிக்ஸ் மட்டும் சேர்க்கப்பட்டு மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லாமல் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

Google News

பல்சர் 125 கார்பன் எடிசன் பைக் மாடல் ஒற்றை இருக்கை மற்றும் ஸ்பீளிட் இருக்கை என இரண்டிலும் கிடைக்கிறது. மேலும் நீலம் மற்றும் சிவப்பு என இரண்டு வண்ணங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. சிங்கிள் சீட் மாடல் விலை ரூ.92,198 மற்றும் இரு பிரவு பெற்ற சீட் வேரியண்ட் ரூ.94,586 (எக்ஸ்-ஷோரூம், சென்னை) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் 125 கார்பன் ஃபைபர்

என்ஜின் மற்றும் நுட்ப விவரக்குறிப்புகளில் பல்சர் 125 மோட்டார் சைக்கிளின் அடிப்படை அம்சங்களை போலவே வந்துள்ளது. பல்சர் 125 கார்பன் ஃபைபர் எடிஷன் 124.4சிசி, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 8,500ஆர்பிஎம் -ல் 11.64பிஎச்பி, 6,500ஆர்பிஎம்மில் 10.80 என்எம்  டார்க்கையும் வெளிப்படுத்தும். இது ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஷாக் அப்சார்ப்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் கேஸ்-சார்ஜ் செய்யப்பட்ட ட்வின் ரியர் ஸ்பிரிங்ஸ் ஆகியவை அடங்கும். அதே நேரத்தில் பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் யூனிட் உள்ளது.

இரண்டு நிறங்களிலும் ஹெட்லைட் கவ்ல், ஃப்யூவல் டேங்க் மற்றும் ஷ்ரூட்ஸ், இன்ஜின் கவ்ல், ரியர் பேனல் மற்றும் அலாய் வீல் ஸ்ட்ரைப்ஸ் ஆகியவற்றில் கார்பன் ஃபைபர் கிராபிக்ஸ் உடன் கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. மேலும், பெல்லி பான், முன் ஃபெண்டர், டேங்க் மற்றும் பின்புற கவுல் ஆகியவற்றில் கார்பன் ஃபைபர் கிராபிக்ஸ் டிசைன் வழங்கப்பட்டுள்ளது.

bajaj pulsar 125 carbon fiber red

ஒற்றை-பாட் ஹெட்லைட்டை இரட்டை DRLகள், ஸ்டைலிஷான எரிபொருள் தொட்டி, போல்ட் ஷ்ரூட்ஸ் மற்றும் பக்கவாட்டு எக்ஸ்ஹாஸ்ட் அமைப்பினை பஜாஜ் பல்சர் 125 கார்பன் ஃபைபர் பைக் பெற்றுள்ளது.