சந்தையிலிருந்து பஜாஜ் பல்ஸர் 135, அவென்ஜர் 150 பைக் நீக்கம்

0

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்திய சந்தையிலிருந்து குறைந்தபட்ச சிசி கொண்ட பஜாஜ் பல்ஸர் 135LS மற்றும் பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் 150 ஆகிய இரு பைக் மாடல்களை நீக்கியுள்ளது. ஏற்றுமதி சந்தையில் தொடர்ந்து பல்ஸர் 135 வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

பஜாஜ் பல்ஸர் 135

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள பல்ஸர் 135 பைக் மாடல் இந்தியாவிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புகள் உள்ள நிலையில், அடுத்த தலைமுறை பல்ஸர் பைக் உற்பத்தி செய்வதற்கான பணிகளை துரித நோக்கில் இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

Google News

பல்ஸர் வரிசையில் இடம்பெற்றிருந்த 135LS பைக்கில் 13.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 135சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 11.4 என்எம் டார் வழங்கி வந்தது. 125சிசி சந்தையில் உள்ள மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. பல்ஸர் 150, பல்ஸர் 160, பல்ஸர் 180, பல்ஸர் 200 மற்றும் பல்ஸர் 220 ஆகிய மாடல்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளது.

க்ரூஸர் ரக பிரிவில் விளங்கும் அவென்ஜர் மாடலில் தொடக்கநிலை சந்தையிலிருந்த அவென்ஜர் 150 மாடலை நீக்கிவிட்டு இனி அவென்ஜர் ஸ்டீரிட் 180, அவென்ஜர் க்ரூஸ் 220 மற்றும் அவென்ஜர் ஸ்டீரிட் 220 ஆகிய மாடல்களை மட்டும் விற்பனை செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.