பல்சர் 150 நியான் பைக்கின் மேம்பட்ட மாடலை வெளியிட்ட பஜாஜ் ஆட்டோ

bajaj pulsar 150 neon

குறைந்த விலை பஜாஜ் பல்சர் 150 நியான் பைக்கில் கூடுதலாக டேங்க் எக்ஸ்டென்ஷன் மட்டும் சேர்க்கப்பட்டு மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லாமல் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. பல்சர் 125 நியான் மற்றும் பல்சர் 150 நியான் என இரு மாடல்களும் ஒரே மாதிரியான தோற்ற வடிவமைப்பினை கொண்டதாக விளங்குகின்றது.

14 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 13 என்எம் இழுவைத் திறன் வழங்கும் 149.5சிசி இரு வால்வுகளை கொண்ட இரட்டை ஸ்பார்க் பிளக் பெற்ற மாடலாக விளங்குகின்றது.

முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் பெற்றுள்ள இந்த மாடலில் தற்போது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் 5 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசையில் தற்போது RS200, NS200, NS160, 220F, 180F, 150, 150 ட்வீன் டிஸ்க்,150 கிளாசிக் மற்றும் பல்சர் 125 என மொத்தம் 9 மாடல்கள் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. புதிய பல்சர் 150 நியான் மாடலின் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை. இந்த மாடல் நியான் சிவப்பு, நியான் சில்வர் மற்றும் நியான் லைம் க்ரீன் நிறங்களில் கிடைக்கின்றது.