ரூ.4,000 வரை பஜாஜ் பல்சர், அவென்ஜர் பைக்குகள் விலை உயர்ந்தது

பஜாஜ் பல்சர் 125 நியான்

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற ஸ்போர்ட்டிவ் ரக பைக்குகளான பஜாஜ் பல்சர்,  க்ரூஸர் ரக பஜாஜ் அவென்ஜர் மற்றும் பஜாஜ் டோமினார் 400 மாடலின் விலையை அதிகபட்சமாக ரூ.10,000 வரை உயர்த்தியுள்ளது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பல்ஸர் 125 நியான் வேரியண்டின் விலையை தவிர மற்ற அனைத்து பல்சர் பைக்குகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மோட்டார் பைக் தயாரிப்பாளர்கள் முன்பே விலை உயர்த்திருந்த நிலையில் இந்த வரிசையில் தற்போது பஜாஜ் ஆட்டோவும் இணைந்துள்ளது. பஜாஜ் பல்சர் 150 நியான் மற்றும் கிளாசிக் என இரு மாடல்களும் அதிகபட்சமாக ரூ.4,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பல்சர் மாடல்கள் ரூ.998 முதல் ரூ.1,299 வரை விலை உயர்ந்துள்ளன.

பஜாஜ் பல்சர் விலை உயர்வு பட்டியல் பின் வருமாறு;-

மாடல் பழைய விலை புதிய விலை
பஜாஜ் பல்சர் 150 கிளாசிக், நியான் ரூ. 71,200 ரூ. 75,200
பஜாஜ் பல்சர் 150 (Single Disc) ரூ. 84,960 ரூ. 85,958
பஜாஜ் பல்சர் 150 (Twin Disc) ரூ. 88,838 ரூ. 89,837
பஜாஜ் பல்சர் NS160 ரூ. 93,094 ரூ. 94,195
பஜாஜ் பல்சர் 180F ரூ. 95,290 ரூ. 96,390
பஜாஜ் பல்சர் 220F ரூ. 107,028 ரூ. 108,327
பஜாஜ் பல்சர் NS200 ரூ. 113,056 ரூ. 114,355

(டெல்லி எக்ஸ்-ஷோரூம்)

க்ரூஸர் ஸ்டைல் அவென்ஜர் 220 ஸ்டீரிட், அவென்ஜர் 220 க்ரூஸ், குறைந்த சிசி பெற்ற அவென்ஜர் 160 ஆகிய மூன்று மாடல்களின் விலை ரூ. 1,197 மற்றும் ரூ.998 என முறையே உயர்த்தப்பட்டுள்ளது.

bajaj pulsar ns 200

மாடல் பழைய விலை புதிய விலை
அவென்ஜர் 220 க்ரூஸ் ரூ. 1,03,891 ரூ. 1,05,088
அவென்ஜர் 220 ஸ்டீரிட் ரூ. 1,03,891 ரூ. 1,05,088
அவென்ஜர்160 ஸ்டீரிட் ரூ. 82,253 ரூ. 83,251

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் ரூ.1.74 லட்சத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து ரூ.6,000 ஜூலை மாதம் உயர்த்தப்பட்டு ரூ.1.80 லட்சமாகவும், தற்போது ரூ.10,000 அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூ.1.90 லட்சம் என (எக்ஸ்ஷோரூம் டெல்லி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.