பஜாஜ் டிஸ்கவர்பஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் டிஸ்கவர் பைக் வரிசையில் புதிய பஜாஜ் டிஸ்கவர் 110 மற்றும் மேம்படுத்தப்பட்ட 2018 பஜாஜ் டிஸ்கவர் 125 ஆகிய இரண்டு மாடல்களை ஜனவரி 10, 2018 தேதியில் விற்பனைக்கு வெளியிட உள்ளதை அதிகார்வப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

பஜாஜ் டிஸ்கவர் 110

பஜாஜின் டிஸ்கவர் பிராண்டு வரிசையில் இடம்பெற்றுள்ள 125சிசி எஞ்சின் பெற்ற மாடல் மேம்பட்டதாக அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், கூடுதலாக புதிதாக 110 சிசி எஞ்சினை பெற்ற டிஸ்கவர் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் 2018 பஜாஜ் அவென்ஜர் 220 மற்றும் புதிய அவென்ஜர் 180 ஆகிய மாடல்களும் வெளியிட வாய்ப்புள்ளது.

டிஸ்கவர் 125 பைக்கில் மேம்படுத்தபட்டதாக வரவுள்ளது. இந்த பைக் புதிய பாடி ஸ்டிக்கரிங் பெற்றதாகவும் மூன்று நிறங்களை கொண்டதாக கிடைக்க உள்ளது. 125சிசி மாடலில் 11 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 10.8 என்எம் டார்க் வெளிப்படுத்த உள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற உள்ளது.

புதிய டிஸ்கவர் 110 பைக்கில் 8.5 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 9 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 110சிசி எஞ்சின் பெற்றதாக வரவுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற உள்ளது.

பஜாஜ் டிஸ்கவர் 125 பைக் ரூ.53,683 விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக் ரூ.50,500 விலையில் விற்பனைக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.