Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
60 கிமீ ரேஞ்சு.., பேட்டரீ லோஇவி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்

60 கிமீ ரேஞ்சு.., பேட்டரீ லோஇவி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்

battre loev

குறைந்த திறன் பெற்ற மின்சார ஸ்கூட்டர்களில் ஜெய்ப்பூரின் பேட்டரீ நிறுவனம் லோஇவி என்ற மின் ஸ்கூட்டரை அதிகபட்சமாக 2 மணி நேரத்தில் சார்ஜிங் செய்யும் வேகமான சார்ஜிங் முறையுடன் 60 கிமீ வரம்பை சிங்கிள் சார்ஜில் வழங்கும் மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

அமேசான் இந்தியா மற்றும் பேட்டரீ டீலர்கள் வாயிலாக விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ள லோஇவி முதற்கட்டமாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் குஜராத்தில் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது.

இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக், திருட்டை தடுக்கும் அலாரம், ரிவர்ஸ் மோட், எல்இடி விளக்குகள், கீலெஸ் இக்னிஷன், யூஎஸ்பி சார்ஜர் போன்றவை இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருப்பதுடன் 1.44 kWH 48V 30Ah லித்தியம் ஃபெரா பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மிக விரைவாக சார்ஜாகின்ற 10 ஆம்ப்ஸ் மூலமாக 2 மணி நேரம் 50 நிமிடத்தில் தேவைப்படும். இந்த பேட்டரிக்கு 3 வருட வாரண்டி வழங்கப்படுகின்றது. 2000 முறை முழுமையான சார்ஜிங் வரம்பை பெற்ற இந்த பேட்டரிக்கு சிறப்பான ஆயுள் உள்ளது.

ரூ.59,990 விலையில் அமேசான் இந்தியா மற்றும் இந்நிறுவன டீலர்கள் வாயிலாக முன்பதிவு செய்யும் போது விரைவாக பெற்றுக் கொள்ளலாம்.

Exit mobile version