ரூ.3.48 லட்சத்தில் பெனெல்லி 302R பைக் களமிறங்கியது.!

0

இந்திய சந்தையில் சூப்பர் பைக் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் புதிதாக ரூ. 3.48 லட்சம் விலையில் பெனெல்லி 302R பைக் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இது TNT 300 பைக்கினை அடிப்படையாக கொண்ட முழு அலங்கரிக்கப்பட்ட மாடலாகும்.

benelli 302r launched

Google News

பெனெல்லி 302R பைக்

வளர்ந்து வருகின்ற சூப்பர் பைக் சந்தைக்கு ஏற்ற வகையிலான அம்சத்துடன் கூடிய பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய பெனெல்லி 302 ஆர் பைக் 200சிசி-க்கு கூடுதலான திறன் பெற்ற மோட்டார் சைக்கிள் விரும்பிகளுக்கு ஏற்ற மாடலாக அமைந்திருக்கும்.

benelli tornado 302

சிகேடி முறையில் இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட உள்ள மிக நேர்த்தியாக இரு பிரிவு முகப்பு விளக்குகள் கொண்டு ஃபேரிங் செய்யப்பட்டுள்ள  302 ஆர் பைக்கின் எடை 196 kg ஆகும். இந்த பைக்கின் முன்புற டயரில் 4 பிஸ்டன் காலிப்பருடன் கூடிய 260 மிமீ இரட்டை டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் 240 மிமீ ஒரு டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பெற்றுள்ளது.

சிறப்பான பயண அனுபவத்தினை வழங்கும் வகையில் முன்பக்கத்தில் 41 மிமீ பயணிக்கும் அப்சைடு-டவுன் ஃபோர்க்குகள் , பின்பக்கத்தில் 45 மிமீ பயணிக்கும் மோனோ ஷாக் அப்சார்பர் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.

Benelli BN 302R

முழுதும் அலங்கரிகப்பட்ட மாடலான 302ஆர் பைக்கில் 38 hp , 27 Nm டார்க் வெளிப்படுத்தும் லிக்யூடு-கூல்டு 300சிசி பேரலல் ட்வீன் என்ஜின் பொருத்தப்பட்டு 6 வேக கியர்பாக்ஸ் வழியாக சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்துச் செல்கின்றது.

கடந்த ஜூன் மாதம் முதல் முன்பதிவு நடைபெற்று வருகின்ற 302 ஆர் பைக்கில் வெள்ளை, சிவப்பு மற்றும் சில்வர் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்க உள்ளது. டொர்னேடோ 302 ஆர் பைக்கின் போட்டியாளர்கள் கவாஸாகி நின்ஜா 300 , கேடிஎம் ஆர்சி 390 , யமஹா ஆர்3 மற்றும் வரவுள்ள புதிய டிவிஎஸ் அகுலா 310 போன்ற மாடல்களுக்கு சவாலாக அமைந்துள்ளது.

டிஎஸ்கே பெனெல்லி 302R பைக் விலை ரூ. 3.48 லட்சம் (இந்தியா எக்ஸ்-ஷோரூம்)

dsk benelli 302r

Benelli BN 302R rear