ரூ.1.99 லட்சத்தில் பிஎஸ்-6 பெனெல்லி இம்பீரியல் 400 விற்பனைக்கு அறிமுகம்

0
Benelli Imperiale 400 BS6 Price
பெனெல்லி இம்பீரியல் 400 பிஎஸ்-6

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக அமைந்துள்ள பெனெல்லி இம்பீரியல் 400 மாடலின் பிஎஸ் 6 இன்ஜின் பெற்ற மாடலின் விலை ரூ.1.99 லட்சம் என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ்-4 மாடலை விட ரூ.20,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இம்பீரியல் 400 மாடலில் 373.5 சிசி ஒற்றை சிலிண்டர் SOHC என்ஜினை பெற்றிருக்கின்றது. இந்த என்ஜின் 21 பிஹெச்பி அதிகபட்ச சக்தியையும் 28 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. 5 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்4 மாடலுடன் பவர் மற்றும் டார்க்கில் எந்த மாற்றங்களும் இல்லை. இம்பீரியல் 400 பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பரினை பெற்று வருகிறது. இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்ட இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது.

சிவப்பு, கருப்பு மற்றும் சில்வர் என மூன்று நிறங்களில் வரவுள்ள இந்த மாடலில் முன்புறத்தில் வட்ட வடிவ ஹெட்லைட், வட்ட வடிவத்திலான இன்டிகேட்டர், க்ரோம் பூச்சு பெற்ற ஃபென்டர், ஸ்போக்டூ வீல் உட்பட ட்வீன் பாட் கொண்ட இண்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை பெற உள்ளது.

Benelli Imperiale 400 BS6
Benelli Imperiale 400 BS6

இந்தியாவில் பிஎஸ்-6 பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் விலை ரூ.1.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. போட்டியாளர்களான ஜாவா, ஜாவா 42 மாடல் ரூ. 1.73 லட்சம் முதல் ரூ.1.84 லட்சம் வரை மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரூ.1.65 லட்சம் முதல் ரூ.1.81 லட்சம் வரை கிடைக்கின்றது.

இம்பீரியல் 400 மாடலுக்கு ஆன்லைன் வழியாக முன்பதிவு துவங்கப்பட்டு கட்டணமாக ரூ.6,000 (முழுமையாக திரும்ப பெறும் முறையில்) வசூலிக்கப்படுகின்றது.

(கொடுக்கப்பட்டுள்ள விலை விபரம் எக்ஸ்ஷோரூம்)