பிஎஸ்-6 பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் விலை 40,000 உயர்வா ?

0

பெனெல்லி இம்பீரியல் 400

பெனெல்லி பைக் நிறுவனத்தின் ரெட்ரோ ஸ்டைல் மாடலான இம்பீரியல் 400 பைக்கின் பார்த் ஸ்டேஜ் 6 பைக்கின் விலை அதிகபட்சமாக ரூ.40,000 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Google News

முன்பே இந்த மாடல் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்றதாக விற்பனை செய்யப்படும் நிலையில், பெரிய அளவில் தோற்ற மாற்றங்களும் இடம்பெறாது என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த மாடலின் விலை ரூபாய் 40,000 வரை உயருவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

இம்பீரியல் 400 மாடலில் 373.5 சிசி ஒற்றை சிலிண்டர் SOHC என்ஜினை பெற்றிருக்கின்றது. இந்த என்ஜின் 19 பிஹெச்பி அதிகபட்ச சக்தியையும் 28 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. 5 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இம்பீரியல் 400 பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பரினை பெற்று வருகிறது. இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்ட இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது.

மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தற்போது அதிகாரப்பூர்வமாக விலை அறிவிக்கப்படவில்லை. தற்போது கசிந்துள்ள தகவலின் படி பிஎஸ் 6 பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் விலை ரூ.2.20 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2021 ஆம் ஆண்டில் பெனெல்லி இம்பீரியல் 530 விற்பனைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

உதவி – bikewale